ஸ்கார்ப் அணியாத முகத்துடன் ட்விட்டரில் போட்டோ ஷேர் செய்த பெண் அரெஸ்ட் – சவுதி போலீஸ் தகவல்

ஸ்கார்ப் அணியாத முகத்துடன் ட்விட்டரில் போட்டோ ஷேர் செய்த பெண் அரெஸ்ட் – சவுதி போலீஸ் தகவல்

எண்ணெய் வளமிக்க ராஜ்யமான சவுதி அரபியாவில் மட்டும் பெண்கள் மீது உலகின் மிகக்கடுமையானயான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது, அவர்கள் வாகனம் ஓட்டுவதற்கும் அனுமதி கிடையாது. சவுதியில் பெண்கள் பொது இடங்களுக்கு வரும்போது தலை முதல் கால்வரையில் திரையிட்டிருக்கவேண்டும் என்பது முக்கியமானதாக உள்ளது.இந்நிலையில் சவுதி அரேபியாவில் முகத்திரை அணியாமல் ட்விட்டரில் புகைப்படம் பதிவுசெய்த பெண்ணை போலீசார் கைது செய்து உள்ளனர்.

sauthi dec 13

சவுதி அரேபியா போலீஸ் செய்தித் தொடர்பாளர் பாவாஸ் அல்-மைமான் கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயரை தெரிவிக்கவில்லை. ஆனால் கைது செய்யப்பட்ட பெண் மாலாக் அல்-செக்ரி என பல்வேறு இணையதளங்கள் செய்தி வெளியிட்டு உள்ளது. கடந்த மாதம் ரியாத்தில் உள்ள ஒரு தெருவில் முகத்திரை அணியாமல் எடுத்த புகைப்படத்தை இளம் பெண் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார். மைமான் வெளியிட்டு உள்ள அறிக்கையில் “பொது ஒழுக்கம் மீறல்கள்” என்ற அடிப்படையில் போலீஸ் நடவடிக்கை எடுத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிரபல ரியாத் கஃபே அருகே நின்ற வண்ணம் புகைப்படம் எடுத்து பெண் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார், அவர் சவுதி சமூதாயத்திற்கு தேவையான இஸ்லாமிய தலை ஸ்கார்ப்-பை அணியாமல் இருந்து உள்ளார் என்று தெரிவித்து உள்ளார்.

தற்போது அந்த இளம்பெண் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளார். “இஸ்லாமியம் போதனைகளை கடைபிடிக்க” வேண்டும் என்று போலீஸ் வலியுறுத்தப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

error: Content is protected !!