July 28, 2021

சவுதியில் மனைவியை உளவு பார்த்தால் ரூ. 86 லட்சம் ஃபைன் +. ஓராண்டு ஜெயில்!

நம்பிதான் ஆகவேண்டும்.. சவூதி அரேபியாவில் பெண்களுக்கான உரிமைகள் மெல்ல மெல்ல வழங்கப்பட்டு வருகின்றன, சவூதி அரேபிய பெண்கள் வாகனமோட்டுவதற்கான அனுமதி அண்மையில் வழங்கப்பட்டிருந்தது, சினிமா திரையரங்கம் அமைப்பதற்கான அனுமதியை அந்நாட்டு அரசாங்கம் அண்மையில் வழங்கியிருந்தது, அதனை தொடர்ந்து பெண்கள் மட்டும் நடத்திச்செல்லகூடிய வாகன விற்பனை நிலையமொன்றும் சவூதி அரேபியாவில் திறக்கப் பட்டிருந்தது. இங்கு முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே வேலை செய்கிறாகள். இப்படியான பெண்களுக்கான தனி மரியாதை வரிசையில் சவுதி அரேபியாவில் மனைவியை உளவு பார்த்தால் ரூ. 86 லட்சம் அபாரம் கட்ட வேண்டும். மேலும் ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என அந்நாட்டுஅரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சவுதி அரேபியாவில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அரச குடும்பத்தினர் செய்த ஊழல்களை முதலில் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். மேலும் அங்குள்ள பெண்கள் மகிழ்ச்சியடையும் பல விஷய்ங்களை செய்து வருகிறார்

இந்நிலையில் மனைவியின் நடவடிக்கைகளை உளவு பார்ப்பது, அவரது செல்போன்களை தேவையில்லாமல் ஆய்வு செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவது குற்றம் என சவுதி அரேபியா அறிவித்துள்ளது. அதாவது மனைவிக்கு தெரியாமல் அவர்களது செல்போனை எடுத்து சோதனை செய்யும் ஆண்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்று சவுதி அரசு அறிவித்துள்ளது. இதன்படி மனைவியின் போனை எடுத்து பார்ப்பது, கேலரியை பார்ப்பது சமூக வலைதளங்களை சோதனை செய்வது யாருடன் பேசுகிறார் என்று பார்த்து சண்டையிடுவது போன்ற செயல்கள் எல்லாம் தண்டனைக்குரிய குற்றங்களாகும்.  அப்படி மனைவியை சந்தேகப்படும் வகையில் உளவு பார்ப்பது நிரூபிக்கப்பட்டால் ரூ. 86 லட்சம் அபாரதம் விதிக்கப்படும். அதோடு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும் விதிக்கப்படும் என சவுதி அரேபியா அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சவுதி அரேபியா அரசின் இந்த உத்தரவினால் கணவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்று அங்குள்ள ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.