தப்லீக் ஜமாத் அமைப்புக்கு சவுதி அரேபிய அரசு தடை!

தப்லீக் ஜமாத் அமைப்புக்கு சவுதி அரேபிய அரசு தடை!

லகின் பல நாடுகளில் உள்ள தப்லீஜ் ஜமாத் என்று இஸ்லாமிய அமைப்பை சவுதி அரேபியா தடை செய்துள்ளது. அந்த அமைப்பு பயங்கரவாதத்திற்கு நுழைவாயிலாக இயங்குகிறது என்றும் சவுதி அரேபியா குற்றம்சாட்டியுள்ளது. தப்லீஜ் ஜமாத் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் துவக்கப்பட்ட அமைப்பாக உள்ளது. மற்ற மதங்களில் இருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறியவர்கள் தங்கள் பழைய மதக் கொள்கைகளை முற்றிலும் கைவிடாமல் அவற்றின் மிச்ச சொச்சங்களை தொடர்ந்து பின்பற்றுவதாக அவற்றை போக்கி அவர்களை தூய்மையான இஸ்லாமை பின்பற்றும்படி செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதுதான் தப்லீஜ் ஜமாத் ஆகும்.

தப்லீஜ் ஜமாத் தடை செய்யப்பட்டு இருப்பதால் சவுதி அரேபிய அரசு இந்த அமைப்புக்கு வழங்கும் பண உதவி முழுக்க நிறுத்தப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த அமைப்புக்கு பெரும்பான்மையாக பண உதவி செய்தது சவுதி அரேபிய அரசு தான் சவுதி அரேபியாவின் உதவி நிறுத்தப்பட்டால் இந்த அமைப்புக்கு அது கடுமையான பின்னடைவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சவுதி அரேபியாவின் நிதி உதவியை பயன்படுத்தித்தான் இந்த அமைப்பு உலக நாடுகளில் தங்கள் கிளைகளை உருவாக்கியது. இதன் செல்வாக்கு பெருகப் பெருக இஸ்லாமைத் தூய்மைப்படுத்தும் என்ற பெயரால் அடிப்படைவாத நடவடிக்கைகளில் இந்த அமைப்பு கவனம் செலுத்தத் தொடங்கியது அடிப்படைவாத நடவடிக்கைகளில் கவனம் செலுத்த துவங்கியது பல முக்கியமான பயங்கரவாத அமைப்புக்கள் இதனுடன் தொடர்பை வலுப்படுத்த விரும்பின.

சவுதி அரேபியாவின் ஆளுவோரின் வகுப்பில் சேர்ந்த வஹாபிகளை தப்லீக் ஜமாத் கல்லறைகளை தொழுவோர் என்று வர்ணித்தது.

2014 ஆண்டில் சவுதி அரேபியாவின் கிராண்ட் முப்தி, தப்லீஜ் ஜமாத்தை ஜோசியம் கூறுவோரின் கட்சி என்றும் சிலைகளை வணங்குவோர் கூட்டம் என்றும் குற்றம் சாட்டினார். அதற்கடுத்து இப்பொழுது தப்லீஜ் ஜமாத் மீது சவுதி அரேபியா தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!