June 23, 2021

சத்யராஜ் மகள் திவ்யாவை இனி `புரட்சித் தமிழச்சி’ என அழைக்க பரிந்துரைக்கிறோம்! ஏன் தெரியுமா?.

புரட்சித் தமிழன்’ என்கிற அடைமொழியை உயர்ந்த மனிதன் சத்யராஜூக்கு பெருமையுடன் வழங்கியவர்கள் நம்ம தமிழ் சினிமா ரசிகர்கள். அவர்கள் இனி சத்யராஜ் மகள் திவ்யாவை இனி `புரட்சித் தமிழச்சி’ என அழைக்க பரிந்துரைக்கிறோம்.

ஆம்.. ஊட்டச் சத்து நிபுணரான இவர், தமிழர் நலனில் அக்கறையோடு செய்திருக்கும் செயலால் தனித்து நிற்கிறார். குறிப்பாக! தமிழகத்தின் ஏழை, எளிய மக்களுக்காகவும், இங்கு அகதிகளாக வாழும் தமிழீழ மக்களுக்காகவும் ‘ஊட்டச்சத்து முகாம்’ ஒன்றை சமீபத்தில் நடத்தினார். அந்த முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு சத்து மருந்துகளும் வைட்டமின் மாத்திரைகளும் இலவசமாகவே வழங்கப்பட்டன.

இது குறித்து திவ்யா சத்யராஜ் விவரித்த போது, ‘ஊட்டச்சத்துக் குறைபாடு பத்தி தொடர்ந்து ஆராய்ச்சி செய்துட்டே வந்தேன். அப்பதான் எவ்ளோ மக்கள் இதனால பாதிக்கப்பட்டிருக்காங்கனு தெரிஞ்சது. அதாவது 2008 – 18 வரை, பச்சிளம் குழந்தைகள் மற்றும், 5 வயதுக்குட்பட்ட குழந்தை களிடம் நடத்திய ஆய்வில், இறப்பு எண்ணிக்கை குறைந்தாலும், ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து உள்ளது.

அதிலும் சர்வதேச அளவில், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் எண்ணிக்கையில் 50 சதவீதம் நம்ம இந்தியாவில் உள்ளது. 2015ல், இந்த எண்ணிக்கை 40 சதவீதமாகத்தான் இருந்துச்சு. நகரங்களில் வசிக்கும் குழந்தைகளை விட, கிராமங்களில் வசிக்கும் குழந்தைகள் தான், ஊட்டச்சத்து விஷயத்தில் பின்தங்கி இருக்காங்க. அதிலும் இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 37 சதவீத குழந்தைகள் எடை குறைவுடன் இருக்காங்க. 39 சதவீத குழந்தைகள் வளர்ச்சி குன்றிய நிலையிலும், 21 சதவீத குழந்தைகள் ஊட்டச் சத்தே இல்லாமலும், 8 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் கடுமையாக பாதிக்கப்பட்டும் இருந்தது தெரியவந்துச்சு.

அது மட்டுமில்லாம வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் விகிதம் 2005-06ல் 48 சதவீதமாக இருந்திச்சு. அது, 2015-16ல் சற்று 46 சத வீதமாக குறைந்துள்ளது. ஆனால், ஊட்டச்சத்தே இல்லாமல் நோஞ்சா னாகிப் போன குழந்தைகளின் விகிதம் சற்று உயர்ந்துள்ளது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்குது. இதெல்லாம் தெரிஞ்சு என்னால என்ன பண்ண முடியும்னு யோசிச்சப்ப ஒரு முகாம் நடத்தலாம்னு தோணுச்சு. ஆயிரக்கணக்கான மக்கள் அந்த முகாமில் கலந்துக்கிட்டாங்க. முகாம் கள்ல வசிக்கிற தமிழீழ மக்களும் வந்து பலனடையணும்கிறது என்னோட விருப்பம்.அதுவும் நிறைவேறுச்சு. இந்த முகாம் வெற்றிகரமா முடிஞ்சது. அதனால தொடர்ச்சியா இதைக் கொண்டுபோக முடிவு செய்திருக்கேன். அதாவது நிரந்தரமா சென்னையில ஓர் ஆலோசனை மையம் அமைக்கலாம்னு நினைச்சிருக்கேன்.

அந்த மையம் மூலமா ஊட்டச்சத்து மருந்து மாத்திரைகளோட, இலவச ஆலோசனைகளும் தொடர்ந்து மக்களுக்குக் கிடைக்கற மாதிரி செய்யப்போறேன்’ என்கிறார் அவர்.

ஆக.. தமிழர்களின் உடல் நலனில் அக்கறை கொண்டு தரமான மருத்துவத்தை இலவசமாகவே வழங்க முடிவெடுத்திருப்பதைப் `புரட்சி’ என்றும் நம் எதிர்கால குழந்தைகள் நலனில் அக்கறை உள்ளவரை ‘புரட்சி தமிழச்சி’ என்றும் சொல்வதில் என்ன தப்பு சொல்லுங்க?