யாருய்யா நீ..? சசிகலா- பதில் எங்கே? – தினகரனுக்கு தேர்தல் கமிஷன் கண்டிப்பு

யாருய்யா நீ..? சசிகலா- பதில் எங்கே? – தினகரனுக்கு தேர்தல் கமிஷன் கண்டிப்பு

சசிகலா நியமனம் தொடர்பாக டி.டி.வி. தினகரன் அளித்த பதிலை ஏற்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என்று ஓபிஎஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்திருந்தனர். இந்த புகார் மனுவுக்கு சசிகலா தரப்பில் இருந்து பிப்ரவரி 28-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

ec mar 3

தேர்தல் ஆணைத்தின் நோட்டீஸுக்கு சசிகலாவின் தரப்பில் இருந்த டிடிவி தினகரன் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி பதிலளித்தார். ஆனால் டிடிவி தினகரன் அளித்த பதிலை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ” கட்சியில் அதிகாரப்பூர்வ பதவியில் இருப்பவரே இந்த மனுவிற்கு பதிலளிக்க முடியும். தேர்தல் ஆணையத்திற்கு கொடுக்கப்பட்ட மனுவில் தினகரனின் பொறுப்பு குறித்த எந்த தகவலும் இல்லை. தினகரன் அதிமுகவின் எந்த பொறுப்பிலும் இல்லை. எனவே இந்த கடிததை ஏற்க முடியாது.

ஆகவே சசிகலா கையெழுத்திட்ட கடித்தினை அவர் சார்பில் அங்கிகரிக்கப்பட்ட நபர் யாரேனும் கொடுக்கலாம். வரும் மார்ச் 10-ம் தேதிக்குள் சசிகலா கையொப்பமிட்ட பதிலை அனுப்ப வேண்டும்” என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

அதாவது அதிமுகவின் துணைப்பொதுச் செயலாரக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டது குறித்து எந்த வித அதிகாரப்பூர்வ தகவலும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப படவில்லை. எனவேதான் டிடிவி தினகரனின் மனுவை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!