August 2, 2021

மினிஸ்டர்ஸ், எம்.பிக்களுடனான பலான சி.டி ஆதாரம் : விசாரணை கமிஷனிடம் ஒப்படைத்தார் சரிதா நாயர்!

சோலார் பேனல் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் தொழிலதிபர் சரிதா நாயர், தன்னுடன் உள்ளாசமாக இருந்ததாக தெரிவித்த முதல்வர் உம்மன் சாண்டி உள்ளிட்ட அமைச்சர்கள் பற்றிய சி.டி ஆதாரங்களை விசாரணை கமிஷனிடம் ஒப்படைத்தார்.

nair may 14

நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய கேரள சோலார் பேனல் வழக்கினை விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜ் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.அந்த கமிஷன் முன்பு ஆஜராகி வாக்கு மூலம் அளித்த சரிதா நாயர், சோலார் பேனல் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் அமைச்சர்கள் பலருக்கும் பல கோடி பணம் லஞ்சமாக கொடுத்ததாக கூறியதோடு, முதல்வர் உம்மன்சாண்டி உள்பட சில அமைச்சர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறியிருந்தார்.

இது தொடர்பான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர், கமிஷன் முன்பு தெரிவித்தார். அந்த ஆதாரங்களை கமிஷனிடம் சமர்ப்பிக்க சரிதாநாயருக்கு, நீதிபதி சிவராஜ் உத்தரவிட்டார். நேற்று கமிஷன் முன்பு ஆஜரான சரிதாநாயர் பாலியல் புகார் தொடர்பான ஆதாரங்களை சமர்ப்பித்தார்.

இது குறித்து கூறிய சரிதா நாயர், “அரசு விருந்தினர் மாளிகை, கிளிப் ஹவுஸ் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் தன்னுடன் தங்கிய எம்.பி.க்கள், அமைச்சர்கள் ஆகியோர் தன்னுடன் உல்லாசமாக இருந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இவற்றின் ஆடியோ, வீடியோ தொடர்பான சி.டி.க்களையும் கமிஷன் முன்பு கொடுத்துள்ளேன். தேவைப்பட்டால் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் தயாராக உள்ளேன்” என்று தெரிவித்தார்.