October 16, 2021

“சங்கீத கலாநிதி” விருது பெறும் முதல் பெண் வயலின் இசைக்கலைஞர் – அ.கன்யாகுமாரி!

சென்னை மியூசிக் அகாடமி சார்பில் கர்நாடக இசை வல்லுநர் ஒருவரை, ஆண்டுதோறும் தெரிவு செய்து அவருக்கு சங்கீத கலாநிதி எனும் விருதினை வழங்கிச் சிறப்பிக்கிறது. சங்கீத என்பதற்கு இசை எனவும், கலாநிதி என்பதற்கு கலையின் பெருஞ்செல்வம் (புதையல்) எனவும் பொருள். ஆக, சங்கீத கலாநிதி என்பதற்கு ‘கர்நாடக இசைக் கலையின் பெருஞ்செல்வம்’ என்பது பொருள். ஒட்டு மொத்த இசையுலகில் மிக உயர்ந்த விருதாக இவ்விருது அனைவராலும் கருதப்படுகிறது.

acadamy jy 25

அந்த வகையில் இந்தாண்டு சங்கீத கலாநிதி விருது பெறும் முதல் பெண் வயலின் இசைக்கலைஞர் என்ற பெருமை பெற்றுள்ளார் அ.கன்யாகுமாரி. இவர் சென்னையில் வசித்து வருபவர். இது குறித்து அகாடமி தலைவர் என்.முரளி கூறும்போது, “அகாடமியின் உயர்மட்ட செயற்குழு ஜூலை 24-ம் தேதி கூடி ஒருமனதாக அ.கன்யாகுமாரிக்கு விருது வழங்க முடிவு எடுக்கப்பட்டது” என்றார்.

சங்கீத அகாடமியின் 90-வது ஆண்டு மாநாடு டிசம்பர் 15 முதல் 2017 ஜனவரி 1-ம் தேதி முதல் நடைபெறுகிறது, இந்த மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார் அ.கன்யாகுமாரி. அப்போது ஜனவரி 1-ம் தேதி சதஸில் அவருக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.

மறைந்த கர்நாடக இசை மேதை எம்.எல்.வசந்தகுமாரியின் மாணவியான அ.கன்யாகுமாரியிடம் பேசிய போது, “இது கடவுளின் அருளால் கிடைத்த பெருமைதான். உரிய தருணத்தில்தான் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளேன். எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. கர்நாடக இசையில் இந்த விருது மிக உயரிய விருதாகும்” என்றார்.

ஆந்திராவின் விஜயநகரத்தைச் சேர்ந்தவரான அ.கன்யாகுமாரி சென்னையில்தான் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவர் முதலில் இவாதுரி விஜயேஸ்வர ராவ் என்பவரிடம் இசை கற்றுக் கொண்டார். பிறகு பிரபல எம்.சந்திரசேகர் என்பவரிடம் வயலின் பயின்றார். 1971-ல் எம்.எல்.வி-யின் மாணவியானார். “நான் எம்.எல்.வி. அவர்களுடனேயே 19 ஆண்டுகள் இருந்தேன் அவர் செல்லுமிடங்களுக்கெல்லாம் செல்வேன், இசை பயில்வேன்” என்றார் கன்யாகுமாரி.

https://www.youtube.com/watch?v=1513JArHbFs

திருப்பதி வெங்கடேஸ்வரக் கடவுளின் 7 திருநாமங்களையொட்டி சப்தாத்ரி என்ற 7 ராகங்களை உருவாக்கியிருக்கிறார் கன்யாகுமாரி. இவர் உருவாக்கிய மற்ற ராகங்கள், மகாலஷ்மி, திருமூர்த்தி, மற்றும் பாரத். இதில் பாரத் சுதந்திர தின கோல்டன் ஜூப்ளியின் போது உருவாக்கப்பட்டது. இவர் இந்தியாவிலும், அயல்நாட்டிலும் நிறைய பேருக்கு சங்கீதம் கற்றுக் கொடுக்கிறார், ஆனால் அதற்காக காசு பணம் எதுவும் வாங்குவதில்லை கன்யாகுமாரி என்பது குறிப்பிடத்தக்கது.