August 8, 2022

சங்கத் தமிழன் – விமர்சனம்!

சில நாட்களுக்கு முன்னர் நம்மிடம் பேசிக் கொண்டிருந்த ஒரு சீனியர் சினிமா ஜர்னலிஸ்ட், “இந்த விஜய்சேதுபதி ஏனிப்பிடி தனக்கு வரும் வாய்ப்புகளின் பலத்தை புரிந்து கொள்ளாமல் செயல் படுகிறார். பொதுவாக  ஒரு நடிகன் தொடர் தோல்விகள் அடையும்போது, மக்களால் மறக்கப் படுவான் அல்லது வெறுக்கப்படுவான். ஆனால் வருஷத்துக்கு ஒரேயொரு ஹிட்டையும் ஏகப்பட்ட தொடர் தோல்விகளையும் கொடுத்த வரும் நிலையிலும்  மக்களிடமிருந்து மட்டுமின்றி விமர்சகர் களிடமிருந்தும் விஜய் சேதுபதிக்கு ஆறுதலும், அறிவுரைகளும் கிடைத்து வருது. அதில் பெரும் பாலான அறிவுரைகள் ‘நீங்கள் சிறந்த நடிகர் என்பது அனைவருக்கும் தெரிந்துவிட்டது. அதனால் பக்கா கமர்ஷியல் பக்கம் உங்கள் கேரியரைத் திருப்பி எதிர்காலத்தை பலப்படுத்திக் கொள்ளுங்கள்’ அப்படீங்- கற ரீதியில் இருந்தன – இருக்கின்றன. அதே சமயம் விஜய்சேதுபதி இந்த வெற்றி, தோல்வி குறித்து அளித்த பேட்டி ஒன்றில் “நான் இதுவரை பெரிய தோல்வியை கொடுத்தது இல்லை. என்னுடைய சில படங்கள் சுமாராக போய் இருக்கலாம். ஆனால் பெரிய அளவில் தோல்வி அடைந்தது இல்லை. எனக்கு வெற்றி, தோல்வி இரண்டுமே ஒன்றுதான். இரண்டையுமே பெரிதாக நினைப்பதோ இதயத்துக்கு எடுத்து செல்வதோ இல்லை’என சொல்லி இருந்தார். ஆனால் தனக்கு வரும் ஸ்கிரிப்டை ஒரு வரிவிடாமல் படிக்கும் விஜய் சேதுபதி தொடர்ந்து சொதப்புவதும், ஹிட் படம் கொடுத்து பல காலமாச்சு என்பதை ஏன் உணர அல்லது நம்ப மறுக்கிறார்.. அதுதான் ஏன் என்று தெரியவில்லை” என்றெல்லாம் சொல்லி மிகவும் வருத்தப்பட்டார். அவர் இப்படி மிகவும் ஃபீல் பண்ணியதற்குக் காரணம் ‘சங்கத்தமிழன்’ படம் பார்த்து விட்டு வந்தது தான். இத்தனைக்கும் சிம்பு நடித்த ‘வாலு’, விக்ரமின் ’ஸ்கெட்ச்’ ஆகியப் படங்களை இயக்கிய இயக்குநர் விஜய் சந்தர் என்பவர் விஜய் சேதுபதியை வைத்து இந்த ‘சங்கத் தமிழன்’ படத்தை இயக்கி யிருக்கிறார். ராக்ஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் என இரண்டு ஹீரோயின்கள் இதில் நடித்துள்ளனர். கதை கூட தூத்துகுடியில் பெரும் களேபரத்தை ஏற்படுத்திய தாமிர ஆலை பின்னணியைக் கொண்டு அமைத்திருந்தாலும் படம் பார்க்க வந்த அம்புட்டு பேரையும் அப்செட் ஆக்கி அனுப்புகிறார்கள் என்பதுதான் உண்மை.

சங்கத் தமிழன் படத்தின் கதை என்னவென்றால் சிங்காரச் சென்னையில் சினிமாவில் நடித்து டாப் ஹீரோவாகும் ஆசையில் தன் தோஸ்த் சூரியுடன் சேர்ந்து அங்குமிங்கு அலைந்துக் கொண்டி ருக்கிறார் நாயகன் முருகன் (விஜய் சேதுபதி). வழியில் மீட் செய்யும் ராக்‌ஷி கண்ணா-வை கதலிக்கவும் ஆரம்பித்து விடுகிறார். அந்த ஹீரோயின் ஒரு தாமிர உருக்கு ஆலை உரிமையாளரின் மகள். இந்த மகளின் காதல் விவகாரம் தெரிந்து கடும் கோபம் கொள்ளும் ராக்ஷி கண்ணாவின் அப்பா, விஜய் சேதுபதியை பார்த்ததும், கோபம் புஸ்-சென் மறைந்து அதிர்ச்சியடைந்து, அடடே.. இவன் முருகன் அல்ல தமிழ், என்று கூற அதையடுத்து நடக்கும் சம்பவங்கள்தான் என்று சொன்னால் புரிந்து கொள்ள வேண்டும்.

விஜய் சேதுபதி-யை வைத்து படத்தை வியாபரம் செய்ய வேண்டும் என்ற ஒற்றை சிந்தனையில் அவரை வைத்து சம்பவம் செய்திருக்கிறார்கள். அதுவும் முருகன், தமிழ் என்னும் இரு தோற்றங் களில் (நம்போணும்) வருகிறார் விஜய் சேதுபதி. இந்த கேரக்டருக்கான நடிப்புகென கொஞ்சம் பிராக்டிஸ் செய்யவில்லை. மாறாக எக்கச்சக்கமாக டயலாக் பேசிக் கொண்டேயிருக்கிறார். . படத்தில் சூரி இருக்கிறார். ஆனால், நகைச்சுவை போதுமான அளவு இல்லை.

இதை எல்லாம் தாண்டி அது சரியில்லை.. இது சரியில்லை என்று சொல்ல எவ்வளவோ இருந்தாலும் ஆரம்ப பேராவில் சொன்னது போல் விஜய் சேதுபதி என்ற ஒற்றை மனிதர் இருக்கிறார். அவ்வளவே.

மொத்தத்தில் இந்த சங்கத் தமிழன் – ஏமாற்றி விட்டான்

மார் 2.5 / 5