January 29, 2023

சமந்தாவின் “யசோதா” படப்பிடிப்பு (ஒரு பாடல் தவிர்த்து) முடிவடைந்தது!!

மிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா அண்மையில் ‘புஷ்பா’ படத்தின் ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் மூலம் நாடு முழுவதும் மேலும் பிரபலமடைந்தார். மிகப்பெரிய அளவில் ஹிட்டான அந்தப் பாடல் மூலை முடுக்கெல்லாம் இன்றளவும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக ஹரிஹரிஷ் இயக்கத்தில் ‘யசோதா’ என்ற படத்தில் நடித்து வருகிறார் சமந்தா. . வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் சமந்தா எழுத்தாளராக நடித்துள்ளார். மேலும், த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் க்ளிம்ப்ஸே இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், படக்குழு தற்போது ஒரு பாடலைத் தவிர்த்து, முழு படப்பிடிப்பிபையும் முடித்துள்ளது. மூத்த தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் Sridevi Movies தயாரிப்பு நிறுவனம் சார்பில் தங்களின் 14வது தயாரிப்பாக இப்படத்தை தயாரித்து வருகிறார். திறமையான இயக்குநர் கூட்டணியான ஹரி-ஹரிஷ் இணைந்து இப்படத்தை இயக்குகிறார்கள்

தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் கூறுகையில்.., “இப்படத்தை எந்த சமரசமும் இல்லாமல் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரித்து வருகிறோம். இதுவரை 100 நாட்கள் கடந்து படப்பிடிப்பு நடந்துள்ளது. இன்னும் ஓர் பாடல் தவிர்த்து படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிந்துவிட்டது. ஒரு பாடலின் படப்பிடிப்பிற்காக சிஜி வேலைகள் ஏற்கனவே நடந்து வருகிறது. இம்மாதம் 15ஆம் தேதி முதல் டப்பிங் பணிகள் தொடங்கும் நிலையில், மற்ற மொழிகளுக்கான டப்பிங் பணியை ஒரே நேரத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். மேலும், இந்த பான்-இந்தியப் படத்தை பெரிய அளவில் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க முடிவு செய்துள்ளோம். படத்தை அனைத்து மொழிகளிலும் பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டு வருகிறோம். இந்த எட்ஜ்-ஆஃப் சீட் த்ரில்லர் உலகம் முழுவதும் ரிலீஸுக்குத் தயாராகி விட்டது. சமந்தா இப்படத்தில் மிக அற்புதமாக நடித்துள்ளார் அதிலும் , குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில், முழு அர்ப்பணிப்பையும் தந்து அசத்தியுள்ளார். தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் இப்படம் வெளியாகும், டீசர் மற்றும் பாடல்கள் உங்கள் எதிர்பார்ப்பை எகிற வைக்கும்.இப்படத்தில் சமந்தா முதன்மை பாத்திரத்தில் நடிக்க வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா ஷர்மா மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர்.” என்றார்

இசை: மணிசர்மா,
வசனங்கள்: புலகம் சின்னராயனா, Dr. சல்லா பாக்யலட்சுமி
பாடல் வரிகள்: ராமஜோகையா சாஸ்திரி கிரியேட்டிவ் டைரக்டர்: ஹேமம்பர் ஜாஸ்தி ஒளிப்பதிவு: M.சுகுமார்
கலை: அசோக்
சண்டைகள்: வெங்கட்
எடிட்டர்: மார்த்தாண்டன், K.வெங்கடேஷ் லைன் புரடியூசர்: வித்யா சிவலெங்கா
இணை தயாரிப்பாளர்: சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி
இயக்கம்: ஹரி – ஹரிஷ்
தயாரிப்பாளர்: சிவலெங்கா கிருஷ்ண பிரசாத்
பேனர்: Sridevi Movies