விண்வெளியில் நட்சத்திரக் குழுவுடன் நடந்து முடிந்த முதல் ரஷ்ய படபிடிப்பு!- வீடியோ

விண்வெளியில் நட்சத்திரக் குழுவுடன் நடந்து முடிந்த முதல் ரஷ்ய படபிடிப்பு!- வீடியோ

ஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமும் ரஷ்ய திரைப்பட தயாரிப்பு நிறுவனமும் விண்வெளியில் திரைப்பட பிடிப்பு நடத்துவதற்காக ஒப்பந்தம் செய்து கொண்டன. விண்வெளி ஆய்வு நிலையத்தில் உள்ள ரஷ்ய விண்வெளி வீரர் ஒருவருக்கு திடீரென உடல்நலம் இல்லாமல் போய்விடுகிறது அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரஷ்யாவில் இருந்து பெண் மருத்துவர் ஒருவர் விண்வெளிக்கு செல்கிறார் அவர் அங்கு அவசர சிகிச்சை அளித்தபின் விண்வெளி வீரரின் உயிரைக் காத்து அவரை மீண்டும் ரஷ்யாவுக்கு அழைத்து வருகிறார். திரைப்படத்தின் முதல் பகுதியும் கடைசிப் பகுதியும் ரஷ்யாவில் நடைபெறுகிறது. ஆனால் திரைப்படத்தின் நடுவில் விண்வெளி வீரருக்கு உடல் நலம் இல்லாமல் போவதும் விண்வெளி வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ நிபுணர் ரஷ்யாவிலிருந்து இன்றைக்கு கூறப்படுவதும் அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிப்பதும் அவருடன் திரும்புவதும் படத்தின் பகுதிகளாக இணைக்கப்பட்டுள்ளன. ரஷ்ய புகழ்மிக்க விண்வெளி வீரர் நோவிட்ஸ்கி திடீரென்று உடல்நலம் பாதிக்கப்படும் விண்வெளி வீரராக நடித்திருக்கிறார்

அவர் கடந்த ஏப்ரல் மாதம் விண்வெளிக்கு சென்றார் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் அவர் தங்கியிருந்தார். திரைப் படப் பிடிப்புக்காக புகழ்மிக்க ரஷ்ய நடிகை பிரஸ்சில்டு ரஷ்யாவிலிருந்து செயற்கைக்கோளில் பறந்துபோய் சர்வதேச விண்வெளி நிலையத்தில் அக்டோபர் ஐந்தாம் தேதி இறங்கினார்.விண்வெளி நிலையத்தில் திடீரென நோய் வாய்ப்பட்ட விண்வெளி வீரருக்கு சிகிச்சை அளிப்பதற்காக பறந்து செல்லும் மருத்துவ நிபுணர் ரஷ்ய நடிகை தான். அவருடன் தி சேலஞ்ச் படத்தின் இயக்குனர் சிப்லெங்கோவும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி செயற்கைக்கோளின் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பறந்து சென்றனர்.

விண்வெளியிலும் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திலும் 12 நாட்கள் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடந்தது. ஏற்கனவே 191 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்த ரஷ்ய விண்வெளி வீரர் ரஷ்ய நட்சத்திரக் குழுவுடன் கஜகஸ்தானுக்கு செயற்கைக்கோளில் திரும்பினார். காற்று மண்டலத்துக்கு செயற்கைக்கோள் வந்ததும் மூன்று பேரும் இருக்கிற செயற்கைக்கோள் பகுதி தனியாக பிரிந்து பாராசூட் உடன் விண்வெளியில் மிதந்து தரை இறங்கியது.

உடனடியாக தரையில் காத்திருந்த விண்வெளி ஆய்வு நிறுவன நிபுணர்கள் மூன்று பேரையும் செயற்கைக்கோளில் இருந்து வெளியே இறக்கி தனித்தனியாக நாற்காலிகளில் அமர வைத்தனர்.இவை அனைத்தையும் திரைப்பட படப்பிடிப்புக் குழு படமாக்கியது. மூன்று பேரும் அருகில் உள்ள மருத்துவ முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களது உடல்நலம் சோதித்து அறியப்பட்டது அதன் பிறகு மூன்று பேரும் தங்கள் இல்லம் திரும்பினார்கள். விண்வெளி ஆய்வை பொருத்தமட்டில் எப்பொழுதும் முன்னணியில் இருக்கும் ரஷ்யா திரைப்படப் பிடிப்பிலும் முதல் நிலையை தட்டிச்சென்றது.

error: Content is protected !!