April 2, 2023

சீனாவில் மக்கள் புரட்சி வெடித்து ஜனநாயகம் மலர வாய்ப்பு?

கடந்த சில நாட்களாக நடந்து வரும் சில நிகழ்வுகளாலும் அதற்கு எதிர் வினை பதிலடி என்று முட்டாள்த்தனமாக செயல் படும் சீனா, மெல்ல தன் சுயரூபத்தை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறது!

சில நடப்புகளைப் பார்ப்போம்!

1. ஆரம்பம் முதல் ட்ரம்ப்பும், அமெரிக்க செனட் உறுப்பினர்களும் கரோனாவை சீனா வைரஸ் என்றும் ஊஹான் வைரஸ் என்றும் கூறி வந்ததை சீனா கடுமையாக எதிர்த்தது. ஆனால் அதைச் சொல்வதை யாரும் நிறுத்தவில்லை! ஒரு கட்டத்தில் சீனா ஒருவேளை ஹைட்ராக்சி க்ளோரோக்வினைத் தருமோ என நினைத்த ட்ரம்ப், வீணாகப் பகைத்துக் கொள்வானேன் என்று தானாக முன்வந்து இனி அவ்வாறு அழைக்கப் போவதில்லை என்றார். ஆனால் சீனாவின் மேல் நம்பகத் தன்மை இழந்த அமெரிக்கா, இந்தியாவிடம் மருந்தும், அதிகளவு தயாரிக்கும் திறமையையும் உணரந்ததும், மீண்டும் ட்ரம்ப் “சீனாவை எச்சரிக்கிறேன்” என நாலு நாளாக தொடங்கி விட்டார்…

2. ஜெர்மனி தன் பங்கிற்கு, கரோனா நஷ்டத்திற்காக சீனாவிடம் 200 பில்லியன் டாலர்களுக்கான இன்வாய்ஸ் அனுப்பியதும், காண்டானது சீனா!…

3. போதாத காலத்திற்கு, அமெரிக்கா தனது 200 கம்பெனிகளின் முதலீட்டையும், ஜப்பான் தனது 100 கம்பெனிகளின் முதலீட்டையும் திரும்பப் பெறுவதாக அறிவித்ததும், மூர்க்கமானது சீனா!.

4. எச்1என்1 வைரஸை உலகில் பரப்பிய அமெரிக்காவிற்கு தான் இன்வாய்ஸ் அனுப்பட்டுமா என, கேனத்தனமாக ட்ரம்ப்பை கேள்வி கேட்டது.

5. இதையெல்லாம் விட சீனாவின் ஆதிக்க குணத்திற்கான போக்கை இந்தியா மீது காட்டியது. முதலில் ஊஹான் வைரஸ் என இந்தியா சொல்லக் கூடாது என மிரட்டும் தொனியில் சொன்னது.

6. இந்தியா எப்படியும் சீனாவிலிருந்து வெளியேறும் நிறுவனங்களின் முதலீட்டைப் பெற்று விடும் என்ற கணிப்பில், இந்த மாத ஆரம்பத்தில் கரோனாவினால் வீழ்ந்த பங்குச் சந்தையில், எச்டிஎஃப்சியின் 1.87% பங்குகளை ₹900 ஒரு பங்கு விலை எனும் கணக்கில் வாங்கிக் குவித்தது. இதைக் கண்டு அதிர்ந்த இந்திய அரசு உடனடியாக, வெளிநாட்டு முதலீடுகள் மத்திய அரசின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற உத்தரவை நேற்று வெளியிட்டது.

இது WTO விதிகளை மீறிய செயல் என்று எதிர்த்துப் பேசி, இந்த உத்தரவை திரும்பப் பெற மிரட்டியது. ஆனால் இந்தியா தன் இறையாண்மைக்காகவும் அந்நியர்கள் இந்தியச் சந்தையை ஆக்ரமிப்பதை தடுக்கவும், இந்த மிரட்டலை புறக்கணித்து விட்டது!

இனி இந்த போக்கின் எதிர்காலம் என்ன?

1. கரோனா முடிவுறும் காலங்களில் சீனாவின் முகத்தில் துப்ப அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, மற்றும் ஐரோப்பிய நாடுகள், குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், மற்றும் மத்திய கிழக்கு அரேபிய நாடுகள் காத்துக் கொண்டு இருக்கின்றன.

2. உயிரி நுண்ணியலில் நோபல் பரிசு பெற்ற ஃப்ரெஞ்ச் விஞ்ஞானி கரோனா வேண்டுமென்றே வெளியே விடப்பட்டது என்கிற ரீதியில் கருத்து தெரிவித்துள்ளார். எனவே ஃப்ரான்ஸ் லைனைத் தாண்டி வந்து முதலில் பாய ரெடியாகும்!

3. சீனாவின் வீட்டோ பவர் குறைந்து இந்தியா ஐநா சபையின் நிரந்தர உறுப்பினராகும் வாய்ப்பு மிக அதிகம்.

4. சீனாவின் மேல் அனைத்து உலக நாடுகளும் பொருளாதாரத் தடை கொண்டு வரும்…. சீனாவின் உற்ற நண்பன் பாகிஸ்தான் அமெரிக்காவையும், அரேபியாவையும் எதிர்க்கத் துணிவின்றி தடையை ஆதரிக்கும்!.

5. சீனாவின் அனைத்து பயோ பரிசோதனைச்சாலைகளையும் மூடி விட உலக நாடுகள் நிர்ப்பந்திக்கும்….

6. சீனாவின் மற்றொரு போதாத காலம், அவர்களது உற்ற நண்பன் வட கொரியா கிம் ஜொங் வேறு இன்னைக்கோ நாளைக்கோ என இழுத்துக் கொண்டிருக்கிறார்….

7. இதெல்லாம் நடக்கும் போது சீனாவின் பொருளாதாரம் பாதிப்படைந்து, சீனாவில் மக்கள் புரட்சி வெடித்து ஜனநாயகம் மலர வாய்ப்புள்ளது. அதற்கு உலக நாடுகள் துணை நிற்கும்!

எல்லாம் சரி! நம்ம உள்ளூர் கம்யூ தோழர்கள் பிழைப்புக்கும் உண்டி குலுக்கலுக்கும் என்ன செய்வார்களாம்? சீனாவைப் பார், ரஷ்யாவைப் பார் என நீட்டி முழக்க முடியாமல் காங்கிரசின் காலை சுரண்டியபடியே அடுத்த பத்தாண்டுகளில் காங்கிரசோடு காணாமல் போவார்கள்!

இது என் கணிப்பு. பெரிய மாற்றங்கள் இன்றி எல்லாம் சம்பவிக்கும்!

நடப்பதெல்லாம் நன்மைக்கே!

சம்பவாமி யுகே யுகே!…

-டிமிட்த் பெட்கோவ்ஸ்கி!