ஏர் இந்தியா மேனேஜ்மெண்ட் குளோஸாகப் போகுதா?.. ராங் நியூஸ்!- அஸ்வானி லோகானி தகவல்!
பல்வேறு இடையூறுகளுக்கிடையே இயங்கிக் கொண்டிருக்கும் ஏர் இந்தியா (Air India) நிறுவனத் தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அஸ்வானி லோகானி (Ashwani Lohani) நேற்று (சனிக் கிழமை), ஏர் இந்தியா நிறுவனம் தனது சேவையை நிறுத்தப் போவதாக வெளியான தகவலில் எவ்வித உண்மையும் இல்லை. அது வெறும் வதந்தி என்று தெரிவித்துள்ளார்.
மேலும் “ஏர் இந்தியா நிறுவனம் சேவை நிறுத்தம் அல்லது மூடுவது தொடர்பான செய்திகள் வெறும் வதந்திகள் ஆதாரமற்றவை. ஏர் இந்தியா தொடர்ந்து பறந்து விரிவடையும்” என்று லோஹானி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தேசிய விமான சேவை நிறுவனத்தை (Air India) தனியார்மயமாக்குவது தொடர்பாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி (Hardeep Singh Puri), ஏர் இந்தியா தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்த ஆலோசனை நடத்தினார்.
அதற்கு முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை, ஏர் இந்தியா நிறுவனம் சேவை நிறுத்துவது என்பது விருப்பமில்லை. ஆனால் கடனில் மூழ்கியுள்ள ஏர் இந்தியாவை மீட்க வேண்டும் என்றால் தனியார்மயமாக்குவது கட்டாயமாகி விட்டது என்று மத்திய அரசாங்கம் கூறியிருந்தது.
ஏர் இந்தியா மீதான கடனால், அது தொடர்ந்து செயல்பட முடியாது என்ற நிலை உருவாகி உள்ளதாகவும், அதை இயக்குவதற்கு தனியார் கைகளில் செல்ல வேண்டும் என்றும் அமைச்சர் பூரி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.