August 12, 2022

ஊழல் வழக்கு :மத்திய அரசுக்கு ஆர்.டி.ஐ அறிவுறுத்தல்!

மத்திய அரசின் ஒவ்வொரு துறைகளிலும் உள்ள அதிகாரிகள் ஊழலில் ஈடுபடுவதை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. சமீபத்தில் 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஊழல் புகாரில் சிக்கினார்கள். அவர்கள் மீது விசாரணை நடந்து வருகிறது. இதில் 29 பேர் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் செயலாளர் அந்தஸ்தில் இருக்கும் அதிகாரிகள் ஆவார்கள். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தவிர சில மூத்த அதிகாரிகள் உள்பட 68 அதிகாரிகள் மீதும் ஏராளமான புகார்கள் வந்ததுள்ளன. அவர்கள் மீதும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஊழல் புகாரில் சிக்கி வழக்கை சந்தித்து வரும் அதிகாரிகளின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்), இந்தியக் காவல் பணி (ஐபிஎஸ்), இந்திய வருவாய் பணி (ஐஆர்எஸ்) உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை ஆண்டுதோறும் ஆட்களைத் தேர்வு செய்கிறது. ஆட்சியர், துணை ஆட்சியர், செய லாளர், காவல் ஆணையர் உள்ளிட்ட அரசுத் துறைகளில் முக்கியப் பொறுப்புகளை வகிக்கும் இவர்களது செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் புகார்களின் அடிப்படை யிலும் துறைரீதியான விசாரணை யும் நடத்தப்படுகிறது. உயர் பதவி வகிக்கும் இவர்களது பதவிக்காலத்தில் 15 ஆண்டுக்குப் பிறகும், அதேபோல் 25 ஆண்டு களுக்குப் பிறகும் இரண்டு முறை இவர்களது சேவையை மேம்படுத் துவதற்காக மத்திய அரசு செயல் திறன் மதிப்பிடல் நடைமுறையை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் புகார்களின் பேரில் தற்போது 68 உயர் அதிகாரிகள் மீது விசாரணை ஏற்கெனவே தொடங்கப்பட்டுள் ளது. இவர்களில் ஒருசிலர் உயர் பொறுப்புகளில் இருந்து வருகின்ற னர். இவர்கள் பணிச் சேவை மதிப்பீடு செய்யப்பட்ட பின்னரும் விசாரணை வளையத்துக்குள் சிக்கியுள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் பணி மற்றும் சேவை குறைபாடு காரண மாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதி காரிகள் உட்பட 129 பேரை மத்திய அரசு கட்டாய ஓய்வில் அனுப் பியது. பணி செயல்திறன் பதிவு ஆவணத்தில் செயல்திறன் குறைவு எனக் கண்டறியப்பட்ட சுமார் 67,000 பேரில் 25,000 பேர் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் போன்ற உயர் பதவி வகிப்பவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான் மத்திய தகவல் ஆணையம் ஒவ்வொரு துறையிலும் ஊழல் வழக்குகளை எதிர்க்கொண்டுவரும் அதிகாரிகளின் முழு விபரங்களையும் பொதுதளத்தில் வெளியிட அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது. பணியாளர்கள் மற்றும் பயிற்சி துறைக்கு உத்தரவிட்டு உள்ள மத்திய தகவல் ஆணையம், ஊழல் வழக்குகளை எதிர்க்கொண்டு உள்ள அதிகாரிகளின் எண்ணியல் சார்ந்த விபரங்களை வெளியிட உத்தரவிட்டு உள்ளது, ஆனால் அவர்களின் பெயர் இடம்பெற கூடாது என தெரிவித்து உள்ளது. எந்தஒரு சூழ்நிலையிலும் பணியாளரின் பெயரானது தெரியவரக்கூடாது என தகவல் ஆணையர் யஷோவர்தன் ஆசாத் தெரிவித்து உள்ளார்.