புதுசா வரும் 100 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்களில் வைக்க ரூ 100 கோடி செலவு?

புதுசா வரும் 100 ரூபாய்  நோட்டுகளை ஏடிஎம்களில் வைக்க ரூ 100 கோடி செலவு?

ஏதேதோ காரணம் சொல்லி மோடி அரசு ரூ 1000 மற்றும் 500 ரூபாய் செல்லாது என்று அறிவித்து விட்டுகடந்த 2 ஆண்டுகளில் அடுத்தடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. முதலில் 2000, 500, 200, 50, 10 ரூபாய் புதிய நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது, புதிய வடிவில், லேவெண்டர் நிறத்தைக் கொண்ட 100 ரூபாய் நோட்டுகளை வெளியிடவிருப்பதாக ரிசர்வ் வங்கி சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. புதிய 100 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படுவதற்கு முன்னர் இந்தியாவிலுள்ள ஏடிஎம் மிஷின்களில் நோட்டின் புதிய வடிவ அளவுக்கு ஏற்றவாறு டிரேக்களை மறுசீரமைப்பு செய்தாக வேண்டும். இதன் அளவு 66 மி.மீ.க்கு 142 மி.மீ. ஆக இருக்கும். இது, தற்போது உள்ள நோட்டுகளின் அளவை விட குறைவாகும்.அப்பணியில் ஏடிஎம் செயல்பாட்டுத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

500, 2000, 50 ஆகிய புதிய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய போது, உடனடியாக ஏடிஎம்களில் வைக்க டிரே வசதி இல்லாத காரணத்தால். ஏடிஎம்களில் புதிய வடிவத்தில் டிரேக்களை செய்து, பணத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பல மாதங்கள் ஆன நிலையில் ஏடிஎம் சீரமைப்புப் பணி முழுவதும் நிறைவடைய 1 வருட காலம் ஆகலாம் என்று ஹிடாச்சி பேமெண்ட் சர்வைசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான லோனி ஆண்டனி தெரிவித்தார்

“இதற்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய 200 ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்றவாறு எந்திரங்களை மறு சீரமைப்பு செய்யும் பணியே இன்னும் நிறைவடையவில்லை. எனவே, புதிய 100 ரூபாய் நோட்டுகளை வைக்க ஏற்பாடு செய்யும் பணிக்கு இன்னும் காலம் எடுக்கும்” என்றார்.

அத்துடன் புதிய 100 ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதற்கு ஏற்ப ஏடிஎம் எந்திரங்களை மாற்றியமைத்து விட்டால், பழைய 100 ரூபாய் நோட்டுகளை அவற்றின் மூலம் விநியோகிக்க முடியாது என்றும் கூறப்படுகிறது. ஏடிஎம் இயந்திரங்களில் மாற்றங்களை மேற்கொள்ள ஆகும் செலவு 100 கோடி ரூபாய் என ஏடிஎம் எந்திர தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!