September 21, 2021

பிரிட்டன் இளவரசர் ஹாரி & மெகன் கல்யாணம் கோலாகலம்!

பிரிட்டன் இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் இரண்டாவது மகன் ஹாரி தனது தோழியும், காதலியுமான அமெரிக்க நடிகை மெகன் மார்கலை திருமணம் செய்ய உள்ளதாக கடந்த ஆண்டு அரசக் குடும்பம் அறிவித்தது  மேலும் இவர்களது திருமணத்துக்கு ராணி அனுமதி அளித்ததை தொடர்ந்து இருவருக்கும் மே 19ம் தேதி திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இன்று பிரிட்டனின் விண்ட்சர் நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் சர்சில் ஹாரி, மெகன் மார்கில் திருமணம் விமர்சையாக நடந்தது. இது இந்த சர்ச்சில் நடக்கும் 16வது அரச குடும்பத்து திருமணம்.

அரச குடும்பத்தார், விஐபிகள் என 600 விருந்தாளிகள் மற்றும் பொதுமக்கள் 2,640 பேர் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். ஓப்ரா வின்ப்ரே, டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியன்ஸ், ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி,இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மணமகள் மெகனின் தந்தை உடல்நலம் காரணமாக திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை. மெகனின் தாயார் டோரியா ராக்லாந்து மட்டும் திருமணத்தில் கலந்து கொண்டார். மெகனின் தந்தைக்கு பதிலாக பட்டத்து இளவரசர் ஹாரி மணப்பெண்ணை அழைத்து வந்தார்.

ஹாரியின் மூத்த சகோதரர் இளவரசர் வில்லியம் மாப்பிள்ளை தோழராக உடன் இருந்தார். திருமண சடங்கில் பங்கேற்ற 10 குழந்தைகளில் வில்லியமின் மகன் ஜார்ஜ் மற்றும் மகள் சார்லட் ஆகியோரும் இடம்பெற்றனர்.

ஆர்க் பிஷ்சப் ஜஸ்டின் வெல்பை இந்த திருமணத்தை நடத்தி வைத்தார். அமெரிக்காவை சேர்ந்த கருப்பின பிஷப்பான மைக்கேல் ப்ரூஸ் கரி திருமண உரையை வழங்கினார்.

திருமணம் முடிந்த பின் மணமக்கள் இருவரும் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் மக்கள் மத்தியில் ஊர்வலமாக சென்றனர். இன்று காலை மணமக்களுக்கு டியூக் மற்றும் டச்சஸ் ஆப் சசக்ஸ் என்ற பட்டத்தை பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத் வழங்கியதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மணமகள் மெகன் மார்கலின் தாயார் கருப்பினத்தை சேர்ந்தவர். இதன்மூலம் பிரிட்டன் வரலாற்றில் முதல்முறையாக ஆப்பரிக்க கலப்பின பெண் ஒருவர் அரச குடும்பத்தின் மருமகளாகியுள்ளார்.

இந்தத் திருமணம் நிகழ்ச்சி ட்விட்டரில் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

#RoyalWedding #Prince Harry ஆகிய  ஹாஸ்டேக்  உலக அளவில் ட்ரெண்ட் ஆகின. இந்தத் திருமண விழாவில் செரீனா வில்லியம்ஸ், டேவிட் பெக்கம் போன்ற விளையாட்டு பிரபலங்களும் கலந்து கொண்டன.