கோயில்கள் சூழ்ந்த காஞ்சியில் எண்ணற்ற திருவிழாக்கள் கொண்டாடப்பட்டாலும், அவற்றை யெல்லாம்விடப் பல வகைகளிலும் சிறப்புகள் கொண்ட அதுவும் நாற்பது வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் திருவிழாவில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த வரிச்சியூர் செல்வம் வி.வி.ஐ.பி வரிசையில் அத்தி வரதரை தரிசனம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வரிச்சியூர் செல்வம் மீது தமிழகம் முழுவதும் பல வழக்குகள் உள்ளன. மூன்று முறை என்கவுன்ட ரிலிருந்து கடைசி நேரத்தில் தப்பித்துள்ளார். தற்போது குற்றச்செயல்களில் ஈடுபடாமல் திருந்தி வாழ்வதாக அவர் கூறினாலும், மறைமுகமாக பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினர் கூறி வருகிறார்கள்.
இதற்கிடையே சர்வதேச மனித உரிமை அமைப்பில் நிர்வாகியாக இருந்த வரிச்சியூர் செல்வம், சினிமா தயாரிப்பிலும் ஈடுபட்டும், நடித்தும் வந்தார். இந்நிலையில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு எழுந்தருளியுள்ள அத்திவரதரை வரிச்சியூர் செல்வம் இன்று தரிசித்தார். அவர் தரிசித்ததில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் பிரபல ரவுடியான அவர் வி.வி.ஐ.பி வரிசையில் சாமி தரிசனம் செய்தது எப்படி ? என்ற சர்ச்சையை வெடித்துள்ளது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு இந்து அறநிலைய துறை சார்பாக எவ்வாறு மரியாதை வழங்கப்பட்டதோ, அதே இடத்தில் வரிச்சியூர் செல்வம் அமர்ந்து சாமி தரிசனம் செய்தது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குடும்பங்களுடன் பல மணிநேரங்கள் வரிசையில் நின்றும் கூட அத்தி வரதரை தரிசிக்க முடியாமல் நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரும்பிச் செல்லும் நிலையில், ஒரு ரவுடி ஸ்பெஷல் தரிசனம் செய்திருப்பது காவல்துறை மீதான நம்பிக்கையை குறைக்கும் வகையில் அமைந்திருப்பதாக மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது மட்டுமின்றி…
இலங்கையில் மக்கள் கிளர்ச்சி வெடித்ததையடுத்து, சிங்கப்பூருக்கு தப்பி ஓடிய கோத்தபய ராஜபக்சே அங்கிருந்தபடியே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.…
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர்கள் உட்பட 3 வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில்,…
கோவேக்ஸின், கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசியாக (பூஸ்டர் டோஸ்) கோர்பிவேக்சை செலுத்த மத்திய அரசு ஒப்புதல்…
பால்டிக் கடற்பகுதியில் புதைக்கப்பட்டுள்ள 1 லட்சம் டன் ரசாயன ஆயுதங்களால், இயற்கைக்கு பேரழிவு ஏற்படும் என்றும் ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
கேரளா மாநிலம் பத்தனம்திட்ட மாவட்டத்தில் அமைந்துள்ளது சபரிமலை ஐயப்பன் கோயில். இந்த கோயிலில் உள்ள ஐயப்பனுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் மாலை…
This website uses cookies.