இந்தியில் ஹிட் படங்கள் கொடுத்த கே.சி.பொகாடியா தமிழில் வழங்கும் “ராக்கி”!

வீட்டு விலங்காகிப் போய் விட்ட நாய்கள் மோப்ப சக்தி மிக்கவை என்பதால்தான் அவற்றை காவல் துறையினர் துப்பறியும் பணியில் ஈடுபடுத்தி வருகிறார்கள் தென்னாப்பிரிக்காவில் டாபர்மேன் வகை போலீஸ் நாய் ஒன்று 1925ல் ஒரு திருடனை மோப்பம் பிடித்தபடி 160 கிமீ பயணித்ததாம். நம் சென்னை மாநகரத்தில் போலீஸ் துறைக்கு என எழும்பூர் மற்றும் செயின்ட் தாமஸ் மவுண்ட் ஆகிய இரு இடங்களில் மொத்தம் 25 மோப்ப நாய்கள் உள்ளன. தமிழகத்திலுள்ள 32 மாவட்டங் களிலும் போலீஸ் துறையில் தலா நான்கு மோப்ப நாய்களும், சென்னை தவிர பிற மாநகரங்களில் தலா நான்கு முதல் ஐந்து மோப்ப நாய்களும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவை வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கவும், கொள்ளை, கொலைகளில் துப்பு துலக்கவும், இயற்கை பேரிடர்களில் சிக்கியவர் களை மீட்கவும், போதைப் பொருள் கடத்தலை தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

அதிலும் தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களிலும் போலீஸ் துறையில் தலா நான்கு மோப்ப நாய்களும், சென்னை தவிர பிற மாநகரங்களில் தலா நான்கு முதல் ஐந்து மோப்ப நாய்களும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவை வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கவும், கொள்ளை, கொலை களில் துப்பு துலக்கவும், இயற்கை பேரிடர்களில் சிக்கியவர்களை மீட்கவும், போதைப் பொருள் கடத்தலை தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இது போன்ற ஒரு நாயின் சாகசகம்தான் ’ராக்கி’ என்ற பெயரில் படமாகி இருக்கிறது. இதை இந்தி பட உலகின் பிரபல தயாரிப்பாளர்-டைரக்டர்களில் ஒருவர், கே.சி.பொகாடியா இயக்கி இருக்கி இருக்கிறார். இவர் அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கான் உள்பட இந்தி பட உலகின் பிரபல கதாநாயகர்களை வைத்து 50-க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்து, டைரக்டு செய்து இருக்கிறார். ரஜினிகாந்தை நடிக்க வைத்து 5 இந்தி படங்களும், ராதிகா சரத்குமாரை நடிக்க வைத்து 5 இந்தி படங்களையும் தயாரித்ததுடன், டைரக்டர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், மணிவண்ணன், கே.எஸ். அதியமான் ஆகியோரை இந்தி பட உலகுக்கு இயக்குனர்களாக அறிமுகம் செய்தவர், இவர்தான்.

அப்பேர் பட்டவர் முதன்முதலாக ஒரு தமிழ் படத்தை தயாரித்து, டைரக்டு செய்து இருக்கிறார். இப்படத்தில் சந்தோஷ் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. அவர் விபத்தில் அடிபட்ட ஒரு நாய்க்குட்டியை சிகிச்சை கொடுக்க வைத்து காப்பாற்றி, ராக்கி என்று பெயர் வைக்கிறார். அவரது மனைவியும் ராக்கியை குழந்தை போல பார்த்துக்கொள்கிறாள். ராக்கி மிகவும் புத்திசாலியாகவும் இருப்பதால் போலீஸ் துறை துப்பறியும் நாய் கள் பயிற்சி நிலையத்தில் சேர்த்து பயிற்சி பெற வைக்கிறார். கமிஷனர் செல்வம் கண்ணியமானவர். அவர் சந்தோஷ் மீது மகன் போல பாசம் கொண்டவர்.

எம்.எல்.ஏ. சாயாஜி, சுந்தர் இருவரும் செய்கின்ற சமூக விரோதச் செயல்களுக்காக சந்தோஷ் அவர்களைக் கைது செய்து லாக்கப் பில் அடைக்கிறார்.சாயாஜி, சுந்தர் இருவரும் சந்தோஷின் உதவியாளர்கள் ராஜா, சேகர் இருவரையும் கைக்குள் போட்டுக் கொள்கின்றனர். லாக்கப்பில் இருந்து தப்பித்து விடுகின்றனர்.சந்தோஷ் கொதிப்படைகிறார். அவர்களைக் கைது செய்ய தேடிப்போகிறார். ராக்கியும் அவருடன் செல்கிறது.

எம்.எல்.ஏ.சாயாஜி, சுந்தர், இன்ஸ்பெக்டர்கள் ராஜா, சேகர் நால்வரும் கூட்டுச்சதி செய்து சந்தோஷைக் கொலை செய்து விடுகின்றனர். மேலும் இன்ஸ்பெக்டர்கள் ராஜா, சேகர் இருவரும் கமிஷனர் செல்வத்திடம், சந்தோஷைக் கொலை செய்தது யாரென்று தெரியவில்லை என்று பொய் சொல்கின்றனர்.

ஆனால், ராக்கி சந்தோஷைக் கொலை செய்த எம்.எல்.ஏ. சாயாஜி, சுந்தர், ராஜா, சேகர் ஆகிய நால்வரையும் எப்படி கண்டுபிடிக்கிறது என்பதைதான் திரையில் சுவைபட சொல்லி இருக்கிறார்கள். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விவேக் வெளியிட்டார். இப்படம் ஏப்ரல் மாதம் பன்னிரண்டாம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.