March 22, 2023

சென்னை வீதிகளில் ரோபோ செக்யூரிட்டி..: சிட்டி போலீஸ் ஸ்மார்ட் ஐடியா..! -வீடியோ

.போலிப் பொருட்களுக்கு பேர் போன சீனாவில் வூஹான் மாகாணத்தில் நிஜமாகவே  கண்டுப் பிடிக்கபட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறி உள்ளது. இதுவரை இந்தியாவில் 33,062 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப் வ்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1,079 பேர் பலியாகியுள்ளனர். மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் இந்த மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, தற்போது மே மாதம் 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் கரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை யில் இரண்டு நாட்களாக கரோனா பாதிப்புக்கு உள்ளானானோரின் எண்ணிக்கை நூறைத் தாண்டிக் காணப்படுகிறது. அதிலும் கொரோனா பாதித்த பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 4 உதவி ஆய்வாளர்கள், 3 தலைமை காவலர்கள், 3 காவலர்கள், ஒரு ஊர்க்காவல் படை வீரர், 4 தீயணைப்பு வீரர்கள் என மொத்தம் 15 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது போலீசாரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கொரோனா பாதித்த பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட போலீசாருக்கு பதில் ரோபோவை பயன்படுத்த சென்னை மாநகர காவல்துறை முடிவு செய்தது. அதன்படி, தனியார் நிறுவன உதவியுடன் 4 சக்கரம் பொருத்தப்பட்ட ரோபோ உருவாக்கப்பட்டது. இந்த ரோபோ கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் யாரும் வெளியே வராதபடி பாதுகாப்பு பணியில் ஈடுபடும்.

இந்த ரோபோவை பொறியாளர் ஒருவர் 100 மீட்டர் தொலையில் இருந்து இயக்குவார். உயர் அதிகாரிகள் பேசுவது ரோபோவில் பொருத்தப்பட்டுள்ள ஒலிப்பெருக்கி மூலம் மக்களுக்கு அறிவிக்கப்படு–்ம. ரோபோவில் 360 டிகிரி சுழலக்கூடிய வகையில் சிசிடிவி கேமரா ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. தடையை மீறி வெளியே வரும் நபர்களை இதன் மூலம் படம் பிடித்து கட்டுப்பாட்டு அறைக்கு ரோபோ அனுப்பும். அதன்படி போலீசார் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்வார்கள். இந்த ரோபோவை முதல்முறையாக சென்னை கிழக்கு மண்டலம், புதுப்பேட்டையில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதியில் நேற்று தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சிங்கா மற்றும் இணை கமிஷனர் சுதாகர் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர்