இஸ்ரோவின் RLV-TD வெற்றிகரமாக ஏவப்பட்டது!!

இஸ்ரோவின் RLV-TD வெற்றிகரமாக ஏவப்பட்டது!!

விண்கலங்களை, செயற்கைகோள்களை செலுத்தும் வாகனமாக ராக்கெட் பயன்படுகிறது. இப்படி விண்வெளியில் ராக்கெட்டை செலுத்துகிறபோது, விண்கலம் திட்டமிட்டபடி பிரிந்து சென்ற பின்னர், அந்த ராக்கெட் கடலில் விழுந்து வீணாகி விடுவது வழக்கம். இதில் அதிக செலவு ஏற்படுவதால், அமெரிக்கா போன்று மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையிலான ராக்கெட்டை தயாரிக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டது.

isro may 23

அதன் முதல்படியாக அப்படியொரு ராக்கெட்டின் மாதிரியை விட 6 மடங்கு சிறியதாக கிட்டத்தட்ட ஒரு சிறிய கார் அளவில் ஆர்.எல்.வி.-டி.டி. என்ற பெயரில் ரூ.95 கோடியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். அது, ஒன்றே முக்கால் டன் எடை கொண்டது. முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ராக்கெட்டானது இன்று விண்ணில் ஏவி சோதனை நடத்தப்பட்டது.

பூமியில் இருந்து சுமார் 70 கி.மீட்டர் தொலைவு சென்ற இந்த ராக்கெட் மீண்டும் வங்க கடலில் வந்து விழுந்தது. இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததையடுத்து இஸ்ரோவின் சாதனையின் மற்றொரு மைல் கல்லாக பார்கப்படுகிறது. இந்த ராக்கெட் மூலம் பல முறை செயற்கை கோளை அனுப்பலாம்.RLV-TD ராக்கெட் சோதனை வெற்றிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழ்த்து தெரிவித்துள்ளார்

திருவனந்தபுரத்தை அடுத்த இயற்கை எழில் கொஞ்சும் மீனவ கிராமமான தும்பா என்ற இடத்தில் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் அமைந்துள்ளது. நாட்டின் முக்கிய ராக்கெட் வடிவமைப்பு மையமாக விளங்கும் இங்குதான் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த விண்கலத்தை தயாரிப்பதற்கான திட்டம் தொடங்கியது.6.5 மீட்டர் நீளம் கொண்ட இந்த விண்கலத்தின் எடை 1.75 டன் ஆகும். ரூ.95 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த விண்கலத்தை வடிவமைக்க 5 ஆண்டுகள் தேவைப்பட்டது. திட்ட இயக்குநர் ஷ்யாம் மோகன் (53) தலைமையிலான 600-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளின் அயராத உழைப்பினால் இது உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளாக இஸ்ரோவில் பணியாற்றி வரும் ஷ்யாம் மோகன் கூறும்போது, “கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே இந்த விண்கலத்தை வடிவமைக்க முடிவு செய்தேன். எனது கனவு இன்று நனவாகி உள்ளது. மீண்டும் பயன்படுத்தும் விண்கலத்தைத் தயாரிப்பது என்பது மிகவும் சிக்கலான, சவாலான பணி ஆகும்” என்றார்.

விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குநர் கே.சிவன் கூறும்போது, “எங்களுடைய பெரிய திட்டத்தை நோக்கிய பயணத்துக்கான முதல் குழந்தை தான் இந்த விண்கலம்” என்றார்.

Related Posts

error: Content is protected !!