Rip Twitter – எலான் மஸ்க் அறிவிப்பு!

Rip Twitter – எலான் மஸ்க் அறிவிப்பு!

லக அளவில் மிகப் பிரபலமான சமூக வலைதளமான ட்விட்டரை கையகப்படுத்திய பிறகு எலான் மஸ்க் அந்நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறார். இந்த ட்விட்டர் அதிக லாபத்தை உருவாக்கத் தொடங்கவில்லை என்றால் திவால் நிலையை எதிர்கொள்ள நேரிடும் என்று கூறிய மஸ்க், வீட்டில் இருந்து வேலை செய்யும் கொள்கையில் பல மாற்றங்களைச் செய்துள்ளார். அதன்படி ஊழியர்கள் ஒரு வாரத்துக்கு 80 மணி நேரம் பணிபுரிய தயாராக வேண்டும் என்றும் கூறினார்.

இந்த நிலையில், ட்விட்டர் ஊழியர்கள் அனைவருக்கும் கடந்த புதன்கிழமை இரவு மின்னஞ்சல் அனுப்பினார். எலான் மஸ்க் அனுப்பிய மின்னஞ்சலில், டுவிட்டர் வெற்றிபெற நாம் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். கடின உழைப்புக்கு தயாராக இருங்கள் அல்லது மூன்று மாத சம்பளத்துடன் ராஜினாமா செய்யலாம் என்று அனைத்து ஊழியர்களிடமும் தெரிவித்துள்ளார். எலான் மஸ்க்கின் எச்சரிக்கையை அடுத்து, நூற்றுக்கணக்கான ட்விட்டர் ஊழியர்கள் மொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர்.

ட்விட்டர் நிறுவனத்தில் சர்வதேச அளவில் 7,500 பேர் பணியாற்றி வந்த நிலையில், சுமார் 3,700 பேர் வேலையை விட்டு நீக்கப்பட்டனர். இந்தியாவில் 200 பேர் ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் 180-க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய 10-க்கும் மேற்பட்ட சிலரே இன்னும் பணியில் தொடர்ந்து வருகின்றனர். பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் 70% வரை தயாரிப்பு மற்றும் பொறியியல் குழுவில் வேலை செய்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் ட்விட்டர் அலுவலங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாகவே அதன் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பப்பட்டுள்ளது. அதில் ட்விட்டர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டு வரும் திங்கட்கிழமை திறக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.மேலும் அந்த செய்தியில் நிறுவனத்தின் தகவல்களை பத்திரிகைகள் மற்றும் பொதுவெளியில் விவாதிப்பதை தவிர்க்கவும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ட்விட்டரை எலான் மஸ்க் மூட போகிறார் என்ற தகவல் பரவி வருகிறது. இதன் காரணமாக #riptwitter, #GoodByeTwitter போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

இதற்கிடையே எலான் மஸ்க்-கும் தனது ட்விட்டர் பக்கத்தில் Rip Twitter என்பதை குறிக்கும் வகையில் படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!