“சின்னப் பையனும் – குண்டு மனிதனும்” – கட்டிங் கண்ணையாவின் டைரிக் குறிப்பு!

“சின்னப் பையனும் – குண்டு மனிதனும்” – கட்டிங் கண்ணையாவின் டைரிக் குறிப்பு!

இன்றிலிருந்து 73 ஆண்டுகளுக்கு முன் 1945 இல் இதே நாளில் நாகசாகியில் குண்டு மனிதனால் (fat man) பல்லாயிரக்கணக்கான மக்கள் துடி துடித்து இறந்த நாள்.

யார் இந்த குண்டு மனிதன்?

இது அமெரிக்கா நாகசாகியின் மீது போட்ட அணு குண்டின் பெயர்தான் அது!.

ஜப்பான் நாட்டிலுள்ள ஹிரோஷிமா- நாகசாகி நகரங்கள் மீது 1945 ஆம் ஆண்டு அமெரிக்கா அணுகுண்டுகளை விமானம் மூலம் போட்டது. ஹிரோஷிமா மீது 1945 ஆகஸ்ட் 6 ஆம் நாள் வீசிய அந்த அணுகுண்டிற்கு அமெரிக்கா விளையாட்டாக வைத்த பெயர் சின்னப்பையன் (LITTLE BOY) என்பதாகும்.

Hit Nagasaki. Hit Hiroshima.

மூன்று நாட்கள் கழித்து அதாவது ஆகஸ்ட் 9 ம் நாளில் நாகசாகி நகரத்தின் மீது அணுகுண்டைப் போட்டனர்.

அதற்கு குண்டு மனிதன் (FAT MAN) என்று பெயர் சூட்டினர்.

இந்த அகோரக் குண்டு வீச்சினால் ஏற்பட்ட சாவும் சேதமும் இன்றுவரை துல்லியமாக மதிப்பிட முயன்றும் முடியவில்லை.

வரலாறு காணாத சேதாரம் என்று மட்டுமே சொல்ல முடியும்.

சுமாராகக் கணக்கிட்டதில் ஹிரோஷிமாவில் மட்டும் குறைந்தபட்சம் 1,40,000 பேர் இக்குண்டு வீச்சினால் இறந்திருக்கிறார்கள் என்றும் 74,000 பேர் நாகசாகியில் மரணமடைந்தனர் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

குண்டு விழுந்த பிறகு மாதக் கணக்காக, வருடக்கணக்காக சிலர் குற்றுயிரும் குலையுயிருமாக உயிருடன் இருந்து துன்பப்பட்டு, கதிர்வீச்சின் தாக்கத்தால் மடிந்தனர்.

‘இறந்தவர்களில் மிகப் பெரும்பான்மையினர் ஏதுமறியாத அப்பாவிப் பொதுமக்கள்’ என்று ஆய்வறிக்கை கூறியது.

அமெரிக்க அரசின் அறிக்கையில், இந்த அணுகுண்டு வீச்சினால்தான் இரண்டாம் உலகப்போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

அணுகுண்டை ஜப்பான் மீது போட்டு பேரழிவை உண்டக்காமலிருந்திருந்தால் இரண்டாம் உலகயுத்தம் இன்னும் பல மாதங்கள் நீடித்திருக்கும் அதன்மூலம் இதனை விட அதிகமான மக்கள் செத்திருப்பர். பரவலாக மக்கள் சாகாமல் பார்த்துக் கொண்டது அமெரிக்கா என்று குறிப்பிட்டது.

நெஞ்சம் பதறும் இப்படுபாதகப் படுகொலையை நியாயப்படுத்தும் அமெரிக்க அரசின் நிலை குறித்துப் சர்ச்சை உலகெங்கும் இன்றும் தொடர்கிறது.

அணுகுண்டு வீச்சினால் ஏற்படும் விளைவுகளை நன்கு அறிந்து கொண்டுதான் அமெரிக்கா இச்செயலைச் செய்தது.

அமெரிக்காவுக்கு அணுகுண்டைப் போட எந்தத் தேவையும் அப்போது இருக்கவில்லை” என்று ஜப்பான் தன் நிலையை முன்வத்தது.

1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஜப்பான் சரணடைவதாக அறிவித்து செப்டம்பர் 2 ஆம் தேதி சரணடைவுப் பத்திரத்தில் கையெழுத்திட்ட பின்னர் இரண்டாம் உலகயுத்தம் முடிவுக்கு வந்தது குறிப்பிடதக்கது

கட்டிங் கண்ணையா

error: Content is protected !!