எச் 4 விசா வைத்திருப்போர் அமெரிக்காவில் பணி புரியலாம்!

எச் 4 விசா வைத்திருப்போர் அமெரிக்காவில் பணி புரியலாம்!

சென்னையைத் தாக்க ஆயத்தமாகி உருவாகி வரும் சில பல புயல்கள் திடீரென திசை மாறி விடுவது போல் அமெரிக்க வாழ் இந்தியர்கள் நிலைமை ஆகி விட்டது. அந்த வகையில் தற்போது வந்துள்ள தகவல்படி  அமெரிக்காவில் எச் 4 விசா வைத்திருப்போர் அமெரிக்காவில் பணி புரிய லாம் என்று கொலம்பியா சர்க்யூட் மாவட்ட மேல் முறையீட்டு நீதிமன்றம் தற்காலிகமாக அனுமதி வழங்கியுள்ளது. இதனால் இந்தியர்கள் பலர் ஒஎருமூச்சு விட்டிருக்கிறார்கள்.

முன்னதாக அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்த காலத்தில் ஒரு உத்தரவை பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவுப்படி கிரீன் கார்டு கோரி அமெரிக்க அரசிடம் விண்ணப்பம் செய்துள்ள எச் 1 B விசா வைத்திருப்போர் துணைவியர் அமெரிக்காவில் பணிபுரியலாம்.அவர்களுக்கு எச் 4 விசா வழங்கலாம் என அனுமதி வழங்கப்பட்டது.

இவ்வாறு அனுமதி வழங்குவதால், அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்களுக்கு தங்கள் மனைவி யர் அமெரிக்காவில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கிறது. அதனால் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு பாதிக்கிறது என்று அமெரிக்க நீதிமன்றங்களில் பலர் மேல்முறையீட்டு மனு செய்தனர். இந்த மனுக்கள் குறித்து விசாரணை கொலம்பியா சர்க்யூட் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணையின்போது தற்காலிகமாக உத்தரவு ஒன்றை சர்க்யூட் நீதிமன்றம் பிறப்பித்தது.

H1B விசா வைத்திருப்போர் பலர் அமெரிக்காவில் பணிபுரிகிறார்கள். அவர்கள் துணைவியருக்கும் அமெரிக்காவில் வேலை கிடைத்தால் அவர்கள் முழுமனதோடு அமெரிக்காவின் பணிபுரிவார்கள். அமெரிக்காவை விட்டு வேறு நாடுகளுக்கு வேலை தேடிச் செல்ல விரும்ப மாட்டார்கள். அதனால் அமெரிக்காவில் உள்ள தொழில்முனைவோருக்கு தாங்கள் விரும்பும் தகுதியுள்ள தொழிலாளர்கள் அமெரிக்காவில் கிடைப்பார்கள். அமெரிக்காவின் உற்பத்தி அதிகரிக்கும். ஏற்றுமதி உயரும். எனவே H1B விசா வைத்திருப்போரின் துணைவியர் H4 விசா பெற்று அமெரிக்காவில் பணி புரிவதை தற்காலிகமாக அனுமதிக்கலாம் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

எச் 4 விசாக்களை வைத்திருப்போர் நிரந்தரமாக அமெரிக்காவில் பணிபுரிய அனுமதிக்கலாமா என்பது குறித்து மாவட்ட நீதிமன்றம் மீண்டும் பரிசீலனை செய்து தனது தீர்ப்பை வெளியிட மீண்டும் அனுமதிக்கப்படுகிறது என்றும் மூன்று நீதிபதிகள் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது

error: Content is protected !!