4 ஜி வோல்ட்இ போன் : ரூ.500 மட்டுமே! -ஜியோவின் அடுத்த அதிரடி?

4 ஜி வோல்ட்இ போன் : ரூ.500 மட்டுமே! -ஜியோவின் அடுத்த அதிரடி?

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஜியோ 4ஜி சேவைகளில் ஏப்ரல் 2017 வரை சுமார் 11.25 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். புதிய வெளியீடு மேலும் ஒரு பலத்த போட்டியை டெலிகாம் சந்தையில் ஏற்படுத்தும் என நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார். புதிய வெளியீடு முன்னணி நிறுவனங்களின் பெரும்பா லான பிரீபெயிட் வாடிக்கையாளர்களை இழக்கச் செய்யும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தியாவில் ஜியோ மட்டுமே 4ஜி வோல்ட்இ நெட்வொர்க் வைத்துள்ளது, மற்ற போட்டி நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா உள்ளிட்டவை வோல்ட்இ நெட்வொர்க்கில் வோல்ட்இ சேவையை சோதனை செய்து வருகின்றன. இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ வெறும் 500 ரூபாய்க்கு 4ஜி ரக வோல்ட் போனை விரைவில் அறிமுகப்படுத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே ப்ரீ கால், டேட்டா என அடுத்தடுத்த தனது அதிரடி அறிவிப்புகளால் ரிலையன்ஸின் ஜியோ வாடிக்கையாளர்களை தனது கட்டுக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கிறது. ஜியோவுக்கு ஈடுகொடுக்க முடியாமல் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் திணறி வருகின்றன.

இந்நிலையில் மலிவு விலையில் 4ஜி வோல்ட் ரக போனை வெறும் 500 ரூபாய்க்கு அறிமுகம் செய்ய ஜியோ திட்டமிட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி முதல் இந்த போன் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்ப டுகிறது. இதன் உற்பத்தி செலவே 1500 ரூபாய்க்கு மேல் ஆகும் நிலையில், ஜியோ 700 ரூபாய் வரை மானியம் வைத்து வெறும் 500 ரூபாய்க்கு இந்த போனை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும், 80 ரூபாயிலிருந்து 90 ரூபாய்க்குள் டேட்டா வசதியும் செய்து கொடுக்க ஜியோ திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜியோவின் 500 ரூபாய் 4ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டால் இந்தியாவில் இருக்கும் அதிகளவிலான 2ஜி வாடிக்கையாளர்கள் 3ஜிக்குள் நுழையாமல் நேரடியாக 4ஜிக்குள் எளிதில் நுழைந்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

error: Content is protected !!