October 19, 2021

ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் பிராப்பேண்ட் சேவை – 100 ஜிபி = 500 ரூபாய்?

ரிலையன்ஸ் நிறுவனம், 1.5 லட்சம் கோடி ரூபாய் ஆரம்ப முதலீட்டில், ஜியோ தொலைத் தொடர்பு சேவை நிறுவனத்தை, கடந்த செப்டம்பரில் துவங்கியது.முதல் ஆறு மாதங்களுக்கு இலவசமாக இணைப்புகளை வழங்கியதால், பல வாடிக்கை யாளர்கள், ஜியோவுக்கு மாறியுள்ளனர். இதனால் மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டில், மொபைல் போன் பயன்படுத்து வோரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிக ரித்து வரும் நிலையில், தொலைத் தொடர்பு துறையில் முதலீடு செய்வதும் அதிகரித்துள்ளது. தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பலவும், வங்கிகளில் கடன் வாங்கியே நிறுவனத்தை துவங்கியுள்ளன. ஆனால், இப்போது, போட்டி அதிகமாகி விட்டதால், அந்த நிறுவனங்களால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இந்நிலையில் தற்போதை ய நிலையில் ரிலையன்ஸ் ஜியோ 4 ஜிபி சேவையை அறிமுகப்படுத்தி பெரும்பான்மை வாடிக்கையாளர்களை தன் கை வசம் வைத்துக்கொண்டது. ஜியோ 4 ஜிபி அறிமுகப்படுத்தப்படும் போது இலவச சேவையை அறிமுகம் செய்து பெரும்பாலான வாடிக்கையாளர்களை கவர்ந்தது. குறிப்பாக இளைஞர்கள் சர்வ சாதாரணமாக ஜியோவுக்கு மாறினார்கள். அதேபோல தற்போது வீடுகளுக்கான பிராட் பேண்ட் சேவையிலும் ஜியோ கால் பதிக்க திட்டமிட்டுள்ளது. வருகின்ற தீபாவளி பண்டிகையில் வாடிக்கையாளர்களுக்கு பிராட் பேண்ட் சேவையை வழங்க தீர்மானித்துள்ளது.

முதலில் 100 முக்கிய நகரங்களில் தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருவதாக தெரிகிறது. வாடிக்கையாளர்களை கவர்வதில் ரிலையன்ஸ் நிறுவனம் தனி இடத்தை பிடித்துள்ளது. இதனால் தற்போது 100ஜிபி டேட்டா ரூ.500க்கு அதிகபட்ச வேகம் 100 எம்.பி.பி.எஸ் என்ற அளவில் கிடைக்க ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் வீடுகளுக்கான பிராட்பேண்ட் இணைப்புத் திட்டத்தில் (வயர்லைன் பிராட்பேண்ட் ) 20 மில்லியனுக்கும் குறைவான வாடிக்கையாளர்களே உள்ளனர். அதில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களை அரசு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் (BSNL) தான் கொண்டுள்ளது. ஏர்டெல் நிறுவனத்திற்கு பிராட்பேண்ட் துறையின் மூலம் வாடிக்கையாளர்களின் தோராய வருவாயாக நபர் ஒன்றிற்கு ரூ.1,064 கிடைக்கிறது. ஏர்டெல் நிறுவனத்திற்கு மொபைல் டேட்டா மூலம் ரூ.162 மட்டுமே கிடைப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரத்தில் ஏர்டெல் நிறுவனம் பிராட்பேண்ட் சேவைகளுக்கான கட்டணத் தொகையை மாற்றியமைத்தது. அதன்படி 60 ஜி.பி டேட்டா ரூ.899க்கும், 90 ஜி.பி டேட்டா ரூ.1,099க்கும், 125 ஜி.பி டேட்டா ரூ.1,299க்கும் வழங்குகிறது. இந்நிலையில் தற்போது ரிலையன்ஸ் ஜியோ வருகை தர உள்ளதால் மொபைல் டேட்டாக்களில் ஏற்பட்ட கடும் சரிவைப்போல பிராட் பேண்ட் துறையிலும் பின்னடைவை சந்திக்க நேரிடும் என்று மற்ற நிறுவனங்களை விட கடன் கொடுத்துள்ள வங்கிகள் கலக்கத்தில் உள்ளன.