ரிலையன்ஸ் ஜியோ ஐபிஎல் தொடரை முன்னிட்டு புதிய சலுகைகள்!

சகலதரப்பினரையும் கவரும் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 11-வது சீசன் போட்டிகள் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ்லெவன் பஞ்சாப், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி டேர்டெவில்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணி களுடன் இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு திரும்பி உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளும் கலந்து கொள்கின்றன. மே 27-ம் தேதி வரை நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் மொத்தம் 60 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன. தொடக்க நாளான இன்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது.

இந்நிலையில், ஐபிஎல் ரசிகர்களைக் குறிவைத்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ கிரிக்கெட் பிளே, ஜியோ கிரிக்கெட் சீசன் பேக் மற்றும் ஜியோ தண் தணா தண் நேரலை காமெடி நிகழ்ச்சி ஆகிய புதிய சேவைகளை அறிவித்துள்ளது. மேலும் ரூ.251 விலையில் புதிய ரீசார்ஜ் பிளானையும் ஜியோ அறிமுகம் செய்திருக்கிறது. 51 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த பிளானில் நாளொன்றுக்கு 2ஜிபி டேட்டா வீதம் 102ஜிபி டேட்டா பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த டேட்டாவை மற்ற இன்டர்நெட் செயல்பாடுகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஜியோ வழங்கும் ஐபிஎல் 2018 சலுகைகளில் பயனர்கள் பரிசுகளை வெல்லும் வாய்ப்புகளும் வழங்கப்படுகிறது. அதாவது, ஜியோ கிரிக்கெட் பிளே திட்டத்தில் கலந்து கொண்டு பயனர்கள் பரிசுகளை வெல்ல முடியும். ஜியோ கிரிக்கெட் சீசன் பேக் திட்டத்தின் மூலம் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் 51 நாட்களும் நேரலையில் கண்டு ரசிக்க முடியும். ஜியோ தண் தணா தண் நேரலை காமெடி நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்க முடியும். இந்தப் புதிய சலுகைகளை ‘மை ஜியோ’ செயலியில் பெற முடியும் என்று அரிவிக்கப்பட்டுள்ளது.