பல்வேறு கிராம வங்கிகளில் அதிகாரி, அலுவலக உதவியாளர் பணிவாய்ப்பு!

பல்வேறு கிராம வங்கிகளில் அதிகாரி, அலுவலக உதவியாளர் பணிவாய்ப்பு!

ந்தியாவில் கிராம வங்கிகளில் அதிகாரி, அலுவலக உதவியாளர் பிரிவில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை ஐ.பி.பி.எஸ்., வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு கிராம வங்கி உள்ளது.

காலியிடம்:

43 கிராம வங்கிகளில் 8106 இடங்கள் உள்ளன. இதில் தமிழக கிராம வங்கியில் 451 இடங்கள் உள்ளன.

வயது:

1.6.2022 அடிப்படையில் அலுவலக உதவியாளர் 18 – 28, ஆபிசர் ஸ்கேல் I (அசிஸ்டென்ட் மேனேஜர்) பதவிக்கு 18 – 30, ஸ்கேல் II (மேனேஜர்) பதவிக்கு 21 – -32, , ஆபிசர் ஸ்கேல் III (சீனியர் மேனேஜர்) பதவிக்கு 21 – – 40, ஆபிஸ் அசிஸ்டென்ட் பதவிக்கு 18 — 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

கல்வித்தகுதி:

ஆபிஸ் அசிஸ்டென்ட் பதவிக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பு, அதிகாரி பணியிடங்களுக்கு பைனான்ஸ், மார்க்கெட்டிங், விவசாயம், கால்நடை அறிவியல், ஐ.டி., கம்ப்யூட்டர், சட்டம், பொருளியல், அக்கவுண்டன்சி போன்ற பிரிவுகளில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை:

பிரிலிமினரி, மெயின் ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு.

தேர்வு மையம்:

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சை, திருச்சி, நெல்லை, வேலுார், விருதுநகர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ. 850. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175.

கடைசிநாள்:

27.6.2022

பணி விபரம் மற்றும் இதரத் தகவல்கள்

https://www.ibps.in/wp-content/uploads/RRB_XI_ADVT.pdf

பணிக்கு விண்ணப்பிக்க

ஆந்தை வேலைவாய்ப்பு

error: Content is protected !!