தமிழ்நாடு போலீஸ் டிப்பார்ட்மெண்டில் டெக்னிக்கல் எஸ்.ஐ. ஜாப் ரெடி!

தமிழ்நாடு போலீஸ் டிப்பார்ட்மெண்டில் டெக்னிக்கல் எஸ்.ஐ. ஜாப் ரெடி!

தமிழகத்தின் காவல் படை பெருமைக்குரியது. ஸ்காட்லாந்துயார்டின் போலீஸ் துறைக்கு நிகரானது என்ற ஒப்பீடுகளும் முன்னர் நிலவியது. இதில் காலியாக உள்ள, 309 ‘டெக்னிகல் எஸ்.ஐ.,’ காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை, தமிழ்நாடு யூனிபார்ம்டு சர்வீஸ் ரெக்ரூட்மென்ட் போர்டு (TNUSRB) அறிவித்து உள்ளது.

வயது: 2018 ஜூலை1 அடிப்படையில், விண்ணப்பதாரர்கள் 20 – 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பிரிவில் மூன்று வருட டிப்ளமோ படிப்பு அல்லது பி.இ., அல்லது பி.டெக்., பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்த கல்வித் தகுதியை 11.07.2018க்கு முன்னர் அவர்கள் பெற்றிருப்பது அவசியம்.

உடல்தகுதி: ஆண்கள் குறைந்த பட்சம் 163 செ.மீ., உயரமும், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவராக இருந்தால் 15௪ செ.மீ., உயரம் இருக்க வேண்டும். இதற்கு நிகரான எடை, மற்றும் இதர உடல் தகுதிகள் கட்டாயம் தேவைப்படும். முழுமையான விபரங்களை இணைய தளத்தில் இருந்து அறியவும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. இதனை ஆன்லைன் அல்லது பாரத ஸ்டேட் வங்கி மூலமாகவோ கட்டணமாக செலுத்த வேண்டும்.

கடைசி நாள் : 2018 ஆக., 10.

விபரங்களுக்கு
ஆந்தை வேலைவாய்ப்பு

error: Content is protected !!