போதும் ; இத்தோட நிறுத்திக்கலாம் – மத்திய அரசுடன் சுமூக உறவு பேண கெஜ்ரிவால் முடிவு!

மோடியை கண்மூடித்தனமாக எதிர்த்து வந்த நிலையில்  திடீரென, ‘இப்படி   எந்த ஒரு பிரச்னைக் கும் மோதிக் கொள்வதால் மட்டுமே தீர்வுஏற்படாது. எனவே  மத்தியஅரசுடன் அனுசரித்துச் செல்வேன்’ என்று டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.

டெல்லியில் இந்த வருடம் ஜனவரி 1-ம் தேதியில் இருந்து இதுவரை 333 குழந்தைகளை மனித கடத்தல் தடுப்பு பிரிவினர் மீட்டுள்ளனர். இவர்களில் பெருமளவிலானோர் டெல்லி நகரிலுள்ள பேருந்து நிலையங்கள், ரெயில்வே நிலையங்கள் மற்றும் பிற இடங்களில் இருந்து மீட்கப்பட்டனர். இதை அடுத்து  டெல்லியில் குடியிருப்பு பகுதியில் சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதை முதல்வர் கெஜ்ரிவால் இன்று துவக்கி வைத்தார்.

அப்போது  பேசிய கெஜ்ரிவால், “டெல்லி மக்களை பாதுகாக்கும் வகையிலேயே சிசிடிவி காமிராக் களை டெல்லி அரசு பொருத்தி வருகிறது. எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளில் ராட்சத மின் விளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றன. டில்லியில்குற்றங்கள் குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டன.  அதனால்தான் 3லட்சம் சிசிடிவி காமிராக்களை நிறுவும்பணியில் எனது அரசு ஈடுபட்டுள்ளது.

மத்தியஅரசுடன் நாங்கள் மென்மையான போக்கை கடைப்பிடிப்பதாக யார் சொன்னது… டில்லியில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. அதை சீரமைக்க கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பல முறை மத்திய அரசிடம் கூறி விட்டேன். மத்திய அரசுடன் எங்கள் அரசு ஒத்துழைத்தே வருகிறது.  சட்டம் ஒழுங்கை முன்னிறுத்தி எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து வருகிறோம். வேறு எந்த உதவிகளும் செய்வதற்கும் மக்களின் நலனுக்காக  நாங்கள் தயாராக இருக்கிறோம்.  மத்திய அரசின் கீழ் வருகிற விவகாரங்களுக்கு அவர்களே பொறுப்பு ஏற்கவேண்டும்.  ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசுவதோ அல்லது திட்டிக்கொள்வதோ ஒரு பிரச்னைக்கு தீர்வு ஆகாது.”என்று கெஜ்ரிவால் பேசினார்

aanthai

Recent Posts

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் – கவர்னர் ஒப்புதலை அடுத்து அரசிதழில் வெளியீடு!

ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டம் நடத்தும்…

3 hours ago

சென்னை உட்பட 8 முக்கிய நகரங்களில் 5ஜி சேவை வந்தாச்சு: ஏர்டெல் அறிவிப்பு!

இந்தியாவில் சென்னை உட்பட 8 முக்கிய நகரங்களில் 5ஜி சேவையை ஏர்டெல் நிறுவனம் நேற்று அறிமுகப்படுத்தியது. இதற்காக, சிம் கார்டு…

4 hours ago

அமைதிக்கான நோபல் பரிசு: ஒரு நபர் மற்றும் இரண்டு அமைப்புகளுக்கு அறிவிப்பு!

சர்வதேச அளவில் உயரிய விருதான நோபல் பரிசு ஆண்டிற்கு ஒரு முறை மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி…

6 hours ago

“இராஜராஜ சோழன் எந்த மதம்? வெட்டி விவாதங்களில் சிக்காதீர்!”

இராஜராஜ சோழன் இந்துவா, இல்லையா என்கிற ஒரு விவாதம் இணையத்தில் பரபரக்கிறது. இது தேவையற்றதாகும். வரலாற்று நிகழ்வுகளை அந்தந்த வரலாற்று…

9 hours ago

ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு ஃபர்ஹானா!:

மக்களின் மனதில் நீங்காத இடம் பிடிக்கும் கதைகளைத் தேர்வு செய்து தயாரிப்பதில் முதன்மையாக இருக்கும் நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்.…

9 hours ago

சொத்து வரி : சென்னை மாநகராட்சியின் சலுகை அறிவிப்பு!

அக்டோபர் 15-–ம் தேதிக்குள் சொத்துவரி செலுத்தினால் 5 சதவீத சலுகை வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை…

1 day ago

This website uses cookies.