போதும் ; இத்தோட நிறுத்திக்கலாம் – மத்திய அரசுடன் சுமூக உறவு பேண கெஜ்ரிவால் முடிவு!

போதும் ; இத்தோட நிறுத்திக்கலாம் – மத்திய அரசுடன் சுமூக உறவு பேண கெஜ்ரிவால் முடிவு!

மோடியை கண்மூடித்தனமாக எதிர்த்து வந்த நிலையில்  திடீரென, ‘இப்படி   எந்த ஒரு பிரச்னைக் கும் மோதிக் கொள்வதால் மட்டுமே தீர்வுஏற்படாது. எனவே  மத்தியஅரசுடன் அனுசரித்துச் செல்வேன்’ என்று டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.

டெல்லியில் இந்த வருடம் ஜனவரி 1-ம் தேதியில் இருந்து இதுவரை 333 குழந்தைகளை மனித கடத்தல் தடுப்பு பிரிவினர் மீட்டுள்ளனர். இவர்களில் பெருமளவிலானோர் டெல்லி நகரிலுள்ள பேருந்து நிலையங்கள், ரெயில்வே நிலையங்கள் மற்றும் பிற இடங்களில் இருந்து மீட்கப்பட்டனர். இதை அடுத்து  டெல்லியில் குடியிருப்பு பகுதியில் சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதை முதல்வர் கெஜ்ரிவால் இன்று துவக்கி வைத்தார்.

அப்போது  பேசிய கெஜ்ரிவால், “டெல்லி மக்களை பாதுகாக்கும் வகையிலேயே சிசிடிவி காமிராக் களை டெல்லி அரசு பொருத்தி வருகிறது. எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளில் ராட்சத மின் விளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றன. டில்லியில்குற்றங்கள் குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டன.  அதனால்தான் 3லட்சம் சிசிடிவி காமிராக்களை நிறுவும்பணியில் எனது அரசு ஈடுபட்டுள்ளது.

மத்தியஅரசுடன் நாங்கள் மென்மையான போக்கை கடைப்பிடிப்பதாக யார் சொன்னது… டில்லியில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. அதை சீரமைக்க கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பல முறை மத்திய அரசிடம் கூறி விட்டேன். மத்திய அரசுடன் எங்கள் அரசு ஒத்துழைத்தே வருகிறது.  சட்டம் ஒழுங்கை முன்னிறுத்தி எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து வருகிறோம். வேறு எந்த உதவிகளும் செய்வதற்கும் மக்களின் நலனுக்காக  நாங்கள் தயாராக இருக்கிறோம்.  மத்திய அரசின் கீழ் வருகிற விவகாரங்களுக்கு அவர்களே பொறுப்பு ஏற்கவேண்டும்.  ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசுவதோ அல்லது திட்டிக்கொள்வதோ ஒரு பிரச்னைக்கு தீர்வு ஆகாது.”என்று கெஜ்ரிவால் பேசினார்

error: Content is protected !!