இன்ஜினியரிங் பாடப்பிரிவுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் மீண்டும் தேர்வெழுத அண்ணா பல்கலைக்கழகம் அரிய வாய்ப்பை வழங்கி உள்ளது. அதன்படி, கடந்த 2001-02 கல்வி ஆண்டு முதல் தற்போதுவரை அரியர் உள்ளவர்கள், அதற்கான தேர்வை எழுதி தேர்ச்சி பெறலாம் என அறிவித்து உள்ளது.
இன்ஜினியரிங் ல் படிப்பில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, 2001-02 கல்வியாண்டின் மூன்றாவது செமஸ்டரிலிருந்தும், 2002-03 கல்வியாண்டின் முதல் செமஸ்டரிலிருந்து, இறுதி செமஸ்டர் வரை அரியர் வைத்தவர்கள், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2001- 2002 கல்வியாண்டில் இருந்து அரியர் வைத்திருக்கும் பொறியியல் மாணவர்கள் வரும் டிசம்பரில் செமஸ்டர் தேர்வு எழுதலாம். நடப்பு கல்வியாண்டு அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் வருகிற டிசம்பர் – ஜனவரியில் நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த ஆண்டுகளில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வாய்ப்பளிக்க உள்ளது.
அதன்படி, 2001- 02 கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் வரும் தேர்வை எழுதி தேர்ச்சி பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2001- 02 கல்வியாண்டு முதல் தற்போது வரை எந்த ஆண்டில் அரியர் இருந்தாலும் தேர்வு எழுத சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மூன்றாவது செமஸ்டர் தொடங்கி அரியர் வைத்திருந்தால் நடைபெறவுள்ள தேர்வில் பகிர்க சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரியர் எழுதவுள்ள மாணவர்கள் தேர்வு கட்டணத்துடன் ரூ.5,000 கூடுதலாக செலுத்தி, www.coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் நவம்பர் 23 முதல் டிசம்பர் 3 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரியர் தேர்வு எழுத நிர்ணயித்துள்ள 9 தேர்வு மையங்களில் மாணவர்கள் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரபல பாடகி வாணி ஜெயராம் இசை உலகில் இதுவரை 19 மொழிகளில் 10000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்; இந்நிலையில்…
பொதுவாக சினிமாவில் ஏகப்பட்ட வகைகள் உள்ளது. குடும்பம், பழிவாங்குதல், நகைச்சுவை, மெலோட்ராமா, திகில், ஆக்சன், கல்ட்,இப்படி இன்னும் நிறைய வகைகள்…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ஒ.பி.எஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம். மேலும்…
நம் நாட்டில் நாளுக்கு நாள் சாலை விபத்துகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. சாலை விபத்தில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பதாக…
இந்திய சமூகத்தினுள் ஆண்டாண்டு காலமாக வேரூன்றி இருக்கும் சாதி எனும் வடிவத்திற்கு எதிராக, பொதுத்தளத்தில் களமாடிய மற்றும் களமாடுபவர்களின் பட்டியல்…
இந்தாண்டுக்கான மிகப்பெரிய ட்ரெண்டிங் வார்த்தைகளில் ஒன்றாக ChatGPT மாறியுள்ளது. நவீன தொழில்நுட்ப உலகில் ஒரு புரட்சிகரமான உரையாடல் AI சாட்பாட்…
This website uses cookies.