September 25, 2021

ஏங்க நீங்க சொல்லுங்களேன்! – ரிசர்வ் பேங்க் கேட்கிறது

சென்னை, ஆமதாபாத், சண்டிகர் உள்ளிட்ட, 18 நகரங்களில், பணவீக்கம் குறித்து, பொது மக்களிடம் கருத்து கேட்கும் திட்டத்தை, ரிசர்வ் வங்கி துவக்கி உள்ளது.

rvi

பண வீக்கம், பருவ மழை, சர்வ தேச நிலவரம் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில், ரிசர்வ் வங்கி, இரு மாதங்களுக்கு ஒரு முறை நிதிக் கொள்கையை வெளியிட்டு வருகிறது. இதற்காக, மக்களிடம் பணவீக்கம் குறித்து, கருத்து கேட்பது வழக்கம். அதன்படி, அடுத்த மூன்று மாதங்களில் உணவுப் பொருட்கள் விலை குறித்த மதிப்பீடு, அடுத்து வாங்க திட்டமிட்டுள்ள பொருட்கள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து, மக்களிடம் கருத்து கேட்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கிக்காக, மும்பையைச் சேர்ந்த, ஹன்சா ரிசர்ச் குழுமம், இப்பணியை மேற்கொள்கிறது. இக்குழுமத்தைச் சேர்ந்த ஊழியர்கள், தேர்வு செய்யப்பட்ட வீடுகளுக்குச் சென்று, அங்குள்ள குடும்பத்தினரின் கருத்துக்களை பதிவு செய்வர். இதே போல, நுகர்வோர் நம்பிக்கை குறித்து, ஆறு நகரங்களைச் சேர்ந்த, 5,400 பேரிடம் கருத்து கேட்பு பணியையும், ரிசர்வ் வங்கி துவக்கியுள்ளது.