பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம்: ஆர்.பி.ஐ அதிரடி!

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம்: ஆர்.பி.ஐ அதிரடி!

ண்மைக் காலமாக இந்திய வங்கிகளின் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து வருகிறது. வங்கி நிர்வாகம், கட்டமைப்பு, ஒவ்வொரு வங்கியின் கணக்கு, இயங்கும் முறை, கட்டுப்பாடுகளை முழுமையாக வங்கிகள் கடைப்பிடிக்கிறதா என்று பல்வேறு ஆய்வுகளை அவ்வப்போது செய்து வருகிறது.

ரூ.1 கோடி அபராதம்

கடந்த 2016ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்தது. ஆனால், இந்த வழிகாட்டுதல்களை, பாரத ஸ்டேட் வங்கி பின்பற்றாததை, வாடிக்கையாளர் ஒருவரின் கணக்கை ஆய்வு செய்தபோது, ரிசர்வ் வங்கி கண்டுபிடித்தது. எனவே இது தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கிக்கு ரிசர்வ் வங்கி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், பாரத ஸ்டேட் வங்கியின் பதில், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலுக்கு இணங்காதது ஆதாரபூர்வமாகத் தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் என பாரபட்சம் பார்க்காமல் மொத்தம் 14 வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி ரூ.14.50 கோடி அபராதம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!