இணையத்தில் சட்டவிரோதமாக 600 டிஜிட்டல் கடன் செயலிகள்!- ரிசர்வ் பேங்க் எச்சரிக்கை!

இணையத்தில் சட்டவிரோதமாக 600 டிஜிட்டல் கடன் செயலிகள்!- ரிசர்வ் பேங்க் எச்சரிக்கை!

ன்றும் நம்மில் பலரை வாட்டிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் தொடங்கிய காலக்கட்டத்தில், ஊரடங்கு கடுமையாக கடைபிடிக்கப்பட்டது. இதனால் சிறுத்தொழில் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை பொருளாதார இழப்பை சந்தித்தன. தனியார் நிறுவனங்களில் வேலையிழப்புகள் அதிகரித்தன. வேலையிழந்தவர்கள் பணத் தேவைக்காகவும், குடும்பத்தை நடத்தவும் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, ஆன்லைனில் கடன் செயலியை பதிவேற்றம் செய்து உடனடியாக கடன் பெறலாம் என்று கவர்ச்சி விளம்பரங்களை இணையதளங்களில் சில நபர்கள் வெளியிட்டனர்.

வங்கிகளில் கடன் வாங்குவதற்கு ஏகப்பட்ட நடைமுறைகள் இருப்பதால், மக்கள் வங்கிகளை நாடுவதை தவிர்க்கின்றனர். இதனை பயன்படுத்திக்கொள்ளும் ஆன்லைன் லோன் செயலிகள், விரைவாக வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கி, தங்களது பொறிக்குள் விழ வைக்கின்றனர். மேலோட்டமாக பார்த்தால், ஒருவரிடம் கடன் வாங்குவதைவிட செயலிகள் மூலம் கடன் வாங்குவது நல்லது போலத் தோன்றும். ஆனால், இதைவிட ஆபத்து லோன் செயலிகள் மூலம் கடன் வாங்குவது. உங்களின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் அவர்களின் செயலிகளை பதிவிறக்கம் செய்யும் நொடியில் இருந்து சேகரித்துக்கொண்டே இருப்பார்கள். அதே சமயம் . இந்த ஆப்களில் சென்று சில அடிப்படை விஷயங்களை மட்டும் நாம் தந்தால் போதும். அடுத்த சில மணி நேரத்தில் கடன் தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைத்துவிடுகிறார்கள்.

இந்நிலையில், சட்டவிரோத டிஜிட்டல் கடன் வழங்கும் நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில், புதிய சட்டத்தை உருவாக்க மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளது. மேலும் இணையத்தில் செயல்பாட்டில் உள்ள ஆயிரத்து 100 டிஜிட்டல் கடன் வழங்கும் ஆப்-களை ரிசர்வ வங்கி அடையாளம் கண்டுள்ளது. இதில் 600 ஆப்-கள் சட்டவிரோதமாக செயல்படுவதாகவும் ஆண்ட்ராய்டு பயனர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் ரிசர்வ வங்கி எச்சரித்துள்ளது.

error: Content is protected !!