ரிசர்வ் பேங்க் கவர்னருக்கு கோரோனா தொற்று!

இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்தா தாஸுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்று பொது மக்கள் மட்டுமின்றி மருத்துவர்கள், முதன்மை பணியாளர்கள் அரசியல் தலைவர்கள் உட்பட அனைவரையும் பாரபட்சமின்றி தாக்கி வருகிறது. ஏற்கனவே இந்த வைரஸ் தொற்றுக்கு மத்திய அமைச்சர்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தற்போது ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸும் கொரோனாவால் பதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து சக்திகாந்தா தாஸ், தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அறிகுறிகள் இல்லை, நல்ல உடல்நிலையுடன் இருக்கிறேன். சமீபகாலமாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் எச்சரிக்கையுடன் இருங்கள், மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். வீட்டிலிருந்தபடியே வேலைகளை கவனிக்கவுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்