ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 19 விளையாட்டு வீரர்களின் பெயர்கள் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை!

விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரரை பெருமைப்படுத்தும் விதத்தில் அர்ஜூனா விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வீரரான ஸ்மிரிதி மந்தனா அர்ஜூனா விருதை பெற்றார். இந்நிலையில் அர்ஜூனா விருதுக்கான பெயர் பட்டியலை பிசிசிஐ ஏற்கெனவே வழங்கியது. அதில் வேகப்பந்து வீச்சாளர் ஷமி, பும்ரா, ஆல் ரவுண்டரான ஜடேஜா பெண்கள் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பூணம் யாதவ் ஆகியோரின் பெயர்கள் அந்த பட்டியலில் இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 19 விளையாட்டு வீரர்களின் பெயர்கள் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. அதில் துப்பாக்கி சுடும் வீரரான அஞ்சும் மோட்கில், ஹாக்கி வீரர் ஜிங்கென்சனா சிங், கால்பந்து வீரரான குர்பிரீத் சிங் சந்து உள்ளிட்ட வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

உலகக்கோப்பையை இந்தியா தோற்றாலும், தன்னுடைய ஆல்ரவுண்டர் திறமையால் இந்திய அணிக்கு பெரிய பலமாக இருந்தவர் ஜடேஜா. இந்திய மல்யுத்த வீரர் புனியா மற்றும் விக்னேஷ் போகத் ஆகியோர் மல்யுத்த பிரிவில் இருந்து ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப் பட்னர். இதில் புனியாவுக்கே ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.