ராவணாயம்: ( பகுதி- 1) – ராமாயணம் ராவணன் பார்வையில்…!

ராவணாயம்: ( பகுதி- 1) – ராமாயணம் ராவணன் பார்வையில்…!

அசுரன், நாத்திகனின் பிரார்த்தனைகள் இரு புத்தகங்களும் கன்னாபின்னா வென்று சிந்தனைய கிளப்பி விட.. கொலுக்கு கதை தீமாக நான் எடுத்துக்கொண்டது ..கதை சொல்லல் கதை .. அதாவது ராமாயணம் ராவணன் பார்வையில்.

ராவணன் மிகச்சிறந்த பேரரசன். அசுர குலங்கள் தழைத்தோங்கி பெரு வாழ்வு வாழ்ந்தனர். இதற்கு முன் அசுர பொற்காலம் மஹா பலி அசுரனனின் காலம்

ராவண ஆட்சி இந்தியாவில் அயோத்தி வரை கைப்பற்றியது. அப்பொழுது தனக்கு பிறந்த மகளையும் போர் முகாமுக்கு அழைத்து வந்திருந்தார். ஜாதகம் பார்ப்பவர்கள் அந்த மகளால் லங்காப்புரிக்கு ஆபத்து என சொல்ல அவரின் பால்ய நண்பணுக்கு குழந்தையை கொல்லும் பொறுப்பு கொடுக்கப்பட்டது.

அவனுக்கோ கொல்ல மனசில்லாமல் எறிந்து விட அதை ஜனகர் எடுத்து ஜானகி என்று பெயரிட்டு அசுர அரசியை மனித இளவரசியாக வளர்க்கிறார். சீதாவின் நிறம் அழகிய மேகக் கருமை. ராமரும் அதே நிறம்தான். ஆனால் கருமையை யாரோ நீலமாக்கி விட்டார்கள்.

சீரும் சிறப்புமாக சீதை வளர, ராவணனுக்கு மாரீசன் மாமா மூலம் சீதை உயிரோடு இருப்பதை அறிகிறார். ராவணனை அவன் இவன் என்று சொல்லும் வழக்கமும், ராமரை ராமன், அவர் இவர் என்று சொல்லும் வழக்கமும் எப்படியோ புகுந்து விட்டது. ஒன்று ராவணர், ராமர் என்று சொல்ல வேண்டும் இல்லை ராவணன் , ராமன் என்று. எதிரியாக இருப்பினும் மரியாதை தேவை.

உடனே நாகரிகத்தில் உச்சத்தில் இருந்த லங்காபுரியில்..ஹாட் ஏர் பலூனோ, இல்லை காற்று ஓடமோ ஏதோ ஒரு புஷ்பக விமானம் என்று பறக்கும் ப்ளைட் இருந்திருக்கு. அதை ராவணன் எடுத்துக்கொண்டு இந்தியாவுக்கு விரைந்தார்.

வழியெங்கும் இயற்கை, பசுமை கொஞ்சும் நதிகள், மலைகள் எல்லாவற்றிலும் மனம் பறிபோனது. மிதிலைக்கு அருகில் உள்ள கானகத்தில் கண்ணுக்கு தெரியாமல் லேண்ட் ஆனார். செடிகளால் மறைத்து விட்டு நகரத்துக்குள் அடியெடுத்து வைத்தால் ..ரோடில் மனிதர்கள் சுச்சா போய்க்கொண்டிருந்தனர். மாடுகள் மேய்ந்தது.. சிலர் மடி மடி மேலப்படக்கூடாது நான் புரோகிதர்கள் என சொல்ல ராவணருக்கு ஏதும் புரியவில்லை. பிறகு மாரீசன் வர்ணாசிரமம் பற்றி விளக்க ஒரே கோபம் ராவணனுக்கு. அசுரர்களில் ஏற்றத்தாழ்வும் இல்லை, புனிதமும் இல்லை. இங்கோ இப்படி இருக்கே என்கிறார். மாரிசன் பிராமணர், ஷத்ரியன், வைசிகர்கள், சூத்திரர்கள் பற்றி விளக்க ராவணனுக்கு அவற்றை ஜீரணிக்க கடினமாக இருக்கு. எல்லாவற்றையும் ஒழித்து சமதர்ம சமுதாயம் தேவை என்று சொல்கிறார்.

சரி நகரத்தில் ஏன் பெண்கள் நடமாட்டம் குறைவா இருக்கு..அவர்கள் வேலை செய்ய வெளியில் வர வேண்டுமே என வினவ..பெண்களின் நிலைமையை அறிகிறார்கள். மிதிலாவில் பெண்கள் முக்காடிட்டு, முகத்தை மூடிக்கொண்டே வர வேண்டும் என்று சொன்னது ராவணனுக்கு கோபம் மூட்டியது. அசுர மகளிருக்கு அப்படி ஏதும் இல்லை. ஆண்கள் போலத்தான் உடையும். ஏன் சக மனைவியை, சகோதரியை கீழாக நடத்துகிறார்கள் என வருத்தம். இந்த கோர மனிதர்களுக்கு இடையில் என் மகள் அசுர இளவரசி வாழ வேண்டாம், அழைத்துக்கொண்டு செல்வோமென மிதிலா அரண்மனை நோக்கி நடைப்போட்டால் ..அங்கு சீதா தேவிக்கு சுயம்வரமென்று அல்லோகல படுகிறது. திருவிழாக் கோலத்தில் இருக்கிறது..

சுயம்வரமென்றால் என்ன என்று கேட்க…யார் வில்லில் நாண் ஏற்றுகிறார்களோ அவரை மணக்கும் ஏற்பாடு என்கின்றனர். ராவணனுக்கு மீசை துடிக்கிறது..எவன் வந்து வில்லை ஏற்றினாலும் திருமணமா? அசுர மகளிர் விருப்பமானவுடன் மட்டுமே திருமணம் புரிவர் .இவர்கள் சட்டம் ஏன் இப்படியெல்லாம்   கோமாளித்த னமாய்..அடிமைத்தனமாய் இருக்கிறது என கொதிக்க..மாரிசன் அமைதிப் படுத்துவார்

மக்களோடு கலந்துக் கொண்டு வேடிக்கை பார்ப்பர். அழகு சீதா வருவாள்..அவளை அடையும் காமக் கண்களோடு ஆயிரம் பேர் நோக்குவர்..ராவணன் கோபம் கொண்டு சீதாவை தூக்கிக் கொண்டு செல்ல முன்னேறுவான்.

அடுத்த பகுதி ..விரைவில்

Kirthika Tharan
error: Content is protected !!