August 14, 2022

என் நாடு : இங்கு நானே பிரதமர் – அக்யூஸ்டு நித்தியானந்தாவின் அதிரடி!

அவ்வப்போது ஆன்லைனில் ட்ரெண்டிங் நியூஸாக வருபவர் தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நித்யானந்தா. உலகமெங்கும் தன்னுடைய சீடர்களை கொண்டு இருப்பவர். பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு பரமஹம்ச நித்யானந்தா பீடம் நடத்திவருகிறார். இங்கு ஏராளமான பெண்கள் பணிபுரிகின்றனர். பல்வேறு நாட்டிலிருந்தும் சீடர்ககள் தொடர்ந்து வருகை புரிந்து வந்தனர். இது போன்ற அவரது ஆசிரமம் மீது குழந்தைகள் கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து, பிடதி ஆசிரமத்தில் 2 நாட்கள் சோதனையும் நடத்தினர். இந்த குற்றச்சாட்டுகளுக்கு இடையே, நித்தியானந்தா எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. அவர் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றுவிட்டதாக ஒரு தகவல் பரவி வந்தது. அவரை தாங்கள் தேடி வருவதாக அகமதாபாத் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ஈக்வடார் அருகே அதாவது தென் அமெரிக்க நாடுகளுக்கு அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி எல்லையற்ற ஒரு நாடாக இது இருக்கும் என தெரிவித்துள்ளார். அதாவது கனடா நாட்டு சீடரான சாரா லாண்ட்ரியிடம் இதுகுறித்து தெரிவிக்கும்போது, ஒரு குட்டி நாட்டை அமைக்க உள்ளதாகவும், மேலும் ஒரு வீடியோவில் இதுகுறித்து விளக்கமாகவும் நித்யானந்தா பேசி தன் புது வெப்சைட் குறித்தும் விவரித்துள்ளார். அந்த தீவிற்கு நித்யானந்தா கைலாசம் என்றும் பெயர் வைத்துள்ளார். இந்து மதத்தை பின்பற்றும் எவரும் கைலாச நாட்டின் குடிமகனாக ஆகலாம் என்றும் வெளிப்படையாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.

இது தவிர்த்து அந்த நாட்டில் 10 கோடி பேர் வரை வாழ்ந்து வருவதாகவும், அந்த நாட்டுக்கென தற்போது தனி பாஸ்போர்ட், மொழி, உள்ளிட்டவற்றையும் குறிப்பிட்டுள்ளார். இது தவிர்த்து அந்த நாட்டில் புதிய அமைச்சரவையை உருவாக்கி ஒரு பிரதமருக்கு இணையான கைலாச நாட்டின் பிரதமராக நித்யானந்தா இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் பாதுகாப்பு ராணுவம் என தனித்தனி துறைகள் உள்ளது. தற்போது அமைச்சரவை கூட்டத்தை கூட்டி நித்தியானந்தா நடத்தி வருகிறார்.

இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக வெளியான இணையதளத்தில், இது எல்லைகளைக் கடந்தது இந்து மதத்தை பின்பற்ற வாய்ப்பு இல்லாதவர்கள் இங்கு வந்து வாழக்கூடிய தகுதியை பெறுவார்கள். உலகெங்கிலும் இருந்து வெளியேற்றப்பட்ட இந்துக்கள் இங்கு ஒன்று இணைவார்கள். அவர்களது சொந்த நாட்டில் இந்து மதத்தைக் கடைப் பிடிக்க முடியாமல் இருந்தவர்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளார். இந்த நாட்டிற்கு செல்ல பாஸ்போர்ட் பொறுத்தவரை தங்கம் மற்றும் சிவப்பு என இரண்டு நிறங்களில் இருக்கும் இங்கு இந்துக்கள் மட்டுமே வாழ முடியும். இந்த நாட்டை சட்டரீதியாக அறிவிக்கும் அனைத்து பணிகளையும் செயல்களையும் அமெரிக்காவை சேர்ந்த மிகப் பெரிய நிறுவனம் ஒன்று பொறுப்பேற்று நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும். நித்தியானந்தா கைலாசத்துக்கு தனி நாடு அந்தஸ்து அந்தஸ்து கிடைக்க பிற ஐநா வை நாட இருப்பதாகவும் நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.