October 18, 2021

ரங்கூன் – திரை விமர்சனம்!

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை வியாசர்பாடி ஏரியாவில் இருக்கும் சாஸ்திரி நகர், பி.வி.காலனி, இந்திரா காந்தி நகர் பகுதிகளுக்குள் நுழைந்து அலைந்து நோட்டமிட்டுப் பார்த்திருக்கிறேன். அங்குதான் பர்மா அகதிகள் நீக்கமற நிறைந்திருந்தார்கள். அவர்களிடம் பேச்சுக் கொடுத்தால் ஆசிய அண்டை நாடுகளுடன் இயற்கை அரண்களாக இன்றளவும் திகழும் மலைத்தொடர் களுக்கு இடையே அழகாக கொலுவீற்றிருக்கு “தங்க நாடு.” என்ற பெயரெடுத்த ரங்கூன் எனப்படும் பர்மா குறித்து பிரமிப்பூட்டும் பல உண்மைச் சம்பவங்களை கேட்கக் கேட்க பரவசமாயிருக்கும். அபேர்ப்பட்ட ரங்கூன் பெயரில் அதுவும் தி கிரேட் டைரக்டர் முருகதாஸ் தயாரிப்பில் உருவாகி ஒரு படம் வெளியானதும் முதல் நாள் போய் பார்த்தேன். ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேனே – கொஞ்சம் ஏமாந்து விட்டேன்.

ஆம்.. ரங்கூனிலிருந்து சின்ன வயதில் அகதியாக வந்து, வடசென்னை பர்மா நகர் என்கிற அன்னை சிவகாமி நகர் பகுதியில் குடியேறுகிறார் ஹீரோ கெளதம் கார்த்திக். வந்த கொஞ்ச நாளில் தந்தையை இழந்து தாய் , தங்கையுடன் பிழைப்பு இல்லாமால் கஷ்டப்படும் ஹீரோவின் பாலய நண்பன் உதவியுடன் அந்த ஏரியாவில் நகைக்கடை நடத்தும் முதலாளி ஒருவரிடம் வேலைக்குச் சேர்கிறார். வேலையில் விசேஷ கவனம் காட்டும் கவுதம் கார்த்திக்கை முதலாளி சித்திக் அவ்வபோது பாராட்டி வேலை வாங்குகிறார். அதே சமயம் சினிமாவுக்கு தேவை என்பதால் ஒரு பெண்ணை காதலிக்கிறார்.

இதனிடையே பழைய பாக்கி ஒன்றின் மூலம் நேர்ந்த நஷ்டத்தை சமாளிக்க முதலாளிக்கு கவுதம் உதவுகிறார். இதில் லம்பாக பணம் பார்த்த பின்னரும் பெரிய திட்டம் ஒன்றைத் தீட்டுகிறார்கள். பழக்கம் போல் அந்த பெரியத் திட்டத்தில் கவுதம் சிக்கிக் கொள்கிறார். அந்த திட்டம் என்ன, கவுதம் அதிலிருந்து வெளியே வந்தாரா, அவர் குடும்பத்தின் நிலை என்ன, காதல் கைகூடியதா, இழப்புகள் என்ன என்பதே ‘ரங்கூன்’.

படத்தின் துவக்கத்திலேயே சென்னை மக்கள் கூட்டங்க?ளுக்கிடையே நடக்கும் கடத்தல் ,ஹவாலா, தங்க கடத்தல் என்று படத்தை வேகமாக கொண்டு போகும் இயக்குநர், இரண்டாம் கொஞ்சம் குழம்ம்பி, குழ்ப்பி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். பலரும் கண்டிராத பர்மா பார்டரிலிருந்து அதன் பல்வேறு இடங்களில் பயணப்பட்ட போக்குக்கு இடையே, அப்பப்போ லவ், ப்ரண்ட் + பேமிலி செண்டிமெண்ட் அதேசமயம் காமெடிக்காக ஸ்பெஷல் ட்ராக்கெல்லாம் போடாமல் கதையை நகர்த்திக் கொண்டு போன இயக்குநர்.பல காட்சிகளில் பல படங்களில் வந்து போன காட்சிகள் வைத்திருப்பதால் சறுக்கி விடுகிறார்.

ஹீரோவான கெளதம் கார்த்திக்கிடம் இம்புட்டு நடிப்புத் திறமை இருப்பதை இபடத்தில்தான் வெளிப்படுத்தி இருக்கிறார். முருகதாஸால் அடுத்த சிம்ரன் என்று வர்ணிக்கப்பட்ட ஹீரோயின் சனா மக்பால் தேறவில்லை.அதே சமயம், கெளதம் கார்த்திக்கின் நண்பர்களாக நடித்துள்ளவர்களும், அவர்களது நடிப்பும் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ். கெளதம் கார்த்திக்கின் முதலாளி நடிப்பு இயல்பு என்றாலும் வஞ்சகம் பழசு.

மொத்தத்தில் ரங்கூன் போய் பார்க்கலாம்!