August 2, 2021

ராம்குமார் போஸ்ட் மார்ட்டம் இன்னும் லேட்டாகுது!

இந்த ராம்குமார்.. இல்லே.. ராம்குமார் – நம்ம புழல் ஜெயில்லே செத்து போன அவனோடஉடலை போஸ்ட் மார்ட்டம் செய்வதில் தங்களுக்கு வேண்டிய டாக்டர்ர்களை நியமிக்கவேண்டும் அப்படீன்னு ராம்குமார் தரப்பினர் கோர்ட்டை அப்ரோச் செய்தாங்க. அதில் தனி நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பிச்சுது.ஆனால் அப்படியும் அதில் திருப்தியடையாமல் தங்கலோட டாக்டர்களை கொண்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய வேண்டும் என்று இன்னிக்கும் ராம்குமார் பெற்றோர் இன்று ஐகோர்ட்டில் அவசர மேல் முறையீடு வழக்கா கேஸ் போட்டாங்க. இதையடுத்து இந்த வழக்கை அவசர வழக்காக மதியம் 2.15 மணிக்கு நீதிபதி குலுவாடி ரமேஷ், வைத்தியநாதன் அமர்வு விசாரிச்சுது.

court sep 20

வழக்கு விசாரணையிலே ராம்குமார் தரப்பில் பேசிய வழக்கறிஞர் சங்கரசுப்புஇது திட்டமிட்ட கொலை ராம்குமார் போலீசாரால் கைது செய்யப்பட்டபோதே போலீசார் கழுத்தை அறுத்ததாக கூறப்பட்டது. ஆகவேதான் எங்கள் தரப்பு டாக்டரை நியமிக்க வேண்டும் என்று கோருகிறோம் என்றார்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அட.. இது முழுஜ்ஜ சூசைட்தான் யுவர் ஆனர். கொலையெல்லாம் அல்ல , இது போன்று அவர்கள் தரப்பு டாக்டரை அனுமதித்தால் தவறான முன்னுதாரணமாகிவிடும் என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் இது கஸ்டோடியல் டெத் என்பதால் தற்கொலை அல்ல என்ற வாதம் எழுகிறது அதுனாகேதான் அவங்க இப்படியொரு கோரிக்கை வைக்கின்றனர் என்றார்.

அப்போது பேசிய ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் சிறையில் மின்சார வயர்கள் கீழே கைக்கெட்டும் தொலைவில் இருக்காது , மூடித்தான் இருக்கும் என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய நீதிபதிகள் மரணம் சிறைக்குள் தான் நடந்துள்ளது அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் எல்லா நேரங்களிலும் இப்படி கேட்பதில்லையே கஸ்டோடியல் டெத் என்பதால் தானே கேட்கிறார்கள் என்று மீண்டும் தெரிவித்தார்.

அப்போது பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் சென்சிடாவான வழக்கு அல்ல சாதாரண தற்கொலைத்தான் என்று தெரிவித்தார்.

பின்னர் நீதிபதிகள் உங்கள் தரப்பில் யாரை போட சொல்கிறீர்கள் யார் என்று சொல்லுங்கள் என்று கேட்டார்.

அதற்கு ராம்குமார் தரப்பு போரூர் தடவியல் துறை உதவி பேராசிரியர் சம்பத் குமார் பெயரை சொன்னார். அட.. நீங்க பிரைவேட் ஆஸ்பிட்டல் டாக்டரைரை ஏன் சொல்கிறீர்கள், இப்படி குறிப்பிட்ட டாக்டரை கேட்க என்ன காரணம் ஏன் அரசு மருத்துவர்கள் திறமையானவர்கள் தானே என்று கேட்டார்.

அட்.. இந்த கவர்மெண்ட் மருத்துவர்கள் தங்கள் பணி பாதுகாப்புக்காக அரசு சொல்வதைத்ய்தான் செய்வார்கள் அதனால் தான் தனியார் மருத்துவரை கேட்கிறோம் என்றனர்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த வாத பிரதிவாதங்களில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் குலுவாடி ரமேஷ், வைத்தியநாதன் அமர்வு உத்தரவிட்டனர்.

அதுவரை ராம்குமார் பிரேத பரிசோதனைக்கு தடை விதித்தனர். இதன் மூலம் மீண்டும் ராம்குமார் பிரேத பரிசோதனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மூன்று பேர் கொண்ட அமர்வு இன்று மாலை அல்லது நாளை காலையில் இந்த வழக்கை விசாரிக்கும் என தெரிகிறது.