ஐதராபாத்தில் ராமானுஜருக்கு ரூ. 1000 கோடி செலவில் சிலை தயார்!-

ஐதராபாத்தில் ராமானுஜருக்கு ரூ. 1000 கோடி செலவில் சிலை தயார்!-

பல பல கோடி செலவில் பட்டேல் சிலையை வைத்த மோடி மீதான காட்டம் இன்னும் குறையாத நிலையில் ஐதராபாத்தில் ராமானுஜருக்கு ரூ. 1000 கோடி செலவில் பிரமாண்ட சிலை கட்டப்பட்டு வருகின்றது. இதையும் பிரதமர் மோடி திறந்துவைக்க ஏற்பாடுகள் நடப்பதாக கூறப்படுது.

இது குறித்து இத்திட்டத்தை பொறுப்பேற்று நடத்தும் திருதண்டி சின்ன ஜீயர், “வைஷ்ண குருவான ராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தி விழா தற்போது (2017-18) நடந்து வருகிறது. ராமானுஜர், ஸ்ரீரங்கம், திருமலை, மேல்கோட்டை, காஞ்சிபுரம் கோயில்களுக்கு நேரடியாக வருகை தந்து பூஜை நடைமுறைகளை வழிநடத்தி செயல்படுத்தினார். இதில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ராமானுஜர் செய்த கைங்கர்யம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏழுமலையான் கோயிலில் உள்ள மூலவர் சிலை எந்த கடவுளை குறிக்கும் என்பதில் சர்ச்சை எழுந்தது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராமானுஜர் சுவாமியை அலங்கரிக்கப்படும் ஆபரணங்களை கோயிலுக்குள் கொண்டு சென்று வைத்தார். மறுநாள் காலை கதவை திறந்தபோது, சுவாமியின் கைகளில் சங்கு, சக்கரம் இருப்பதை வைத்து, கோயிலுக்குள் இருப்பது பத்மாவதி தாயாரின் கணவரான மகாவிஷ்ணுவின் அவதாரமாக விளங்கும் வெங்கடேஸ்வர சுவாமி என்பதை உறுதிப்படுத்தினார்.

இதையடுத்து, கோயிலில் நித்திய பூஜைகள் செய்வதற்காக ராமானுஜரின் சீடரான அனந்தாழ் வாரை நியமித்து நித்திய புஷ்ப கைங்கர்யம் செய்தார். அக்காலத்திலேயே தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்தவர். அவரின் ஆயிரம் ஆண்டு ஜெயந்தியையொட்டிதான், ஐதராபாத்தில் 216 அடி உயரத்தில் உலகிலேயேயே இரண்டாவது மிக உயர்ந்த சிலையாக அமர்ந்த கோலத்தில் ராமானுஜர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சிறப்பு பூஜைகளுடன் திறக்கப்படுகிறது” என்றார்.

தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத்தில் கடந்த 2014ம் வருடம் மே மாதம் 2ம் தேதி இந்த பிரமாண்ட சிலையை கட்டும் பணி துவங்கப்பட்டுச்சு. நான்காண்டு கால பணிகளுக்குப் பிறகு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் இந்த சிலை திறக்கப்பட இருக்கிறது. அப்படி திறக்கப்பட்டால், உலகின் மிக உயர்ந்த சிலைகளில் இரண்டாவது இடத்தை இந்த சிலை பிடிக்கும்.

பீடத்துடன் சேர்த்து மொத்த உயரம் 302 அடி, சிலையின் உயரம் மட்டும் 216 அடி. இந்த சிலையை யைத்தான் பிரதமர் மோடி திறந்து வைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. பணிகள் குறித்த காலத்தில் நிறைவடையாததால் சிலை திறப்பது அடுத்த வருடத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!