September 21, 2021

ராம கிருஷ்ண பரமஹம்சர் பிறந்த தின ஸ்பெஷல் ரிப்போர்ட்!

சர்வதேச அளவில் இந்து மதங்களை அதன் கோடபாடுகளை நம்பி, பரப்பும் சீடர்களை உருவாக்கிக் கொடுத்த ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் என்கிற ஶ்ரீ கதாதர சட்டோ பாத்யாயர் பர்த் டே (பிப்ரவரி 18, 1836) இன்று.

வெஸ்ட் பெங்காலில் உள்ள காமார் புகூர் என்ற வில்லேஜில் பிறந்தவர். இயற்பெயர் கதாதர் சட்டோ பாத்யா. சின்ன வயசிலே குழந்தைகளுக்குரிய ஆடல், பாடல், படம் வரைவது, மண் சிலை செய்வதில் ஆர்வமாக இருந்தார். அதே சமயம் பள்ளிப் படிப்பில் நாட்டம் இல்லை. இயற்கையை ரசிப்பதிலும், புராணக் கதை கேட்பதிலும், நண்பர்களுடன் விளையாடுவதையுமே அதிகம் விரும்பினார். அதே நேரம், ஆன்மிகத்தில் ஆழ்ந்த ஞானம் கொண்டிருந்தார்.

அப்பா காலமானதும் தாய் மற்றும் அண்ணன்களின் பராமரிப்பில் வளர்ந்தவர் நண்பர்களுடன் சேர்ந்து நாடகக் குழு நடத்திவந்தார். இவர் விட்டேத்திப் போக்கைக் கண்டு கவலைப் பட்ட இவரை தன்னுடன் கல்கத்தாவுக்கு அழைத்துச் சென்றார் அண்ணன். அங்கு அவரது பாடசாலையில் கல்வி கற்றதுடன் அவருக்கு உதவியாக வீடுகளுக்குச் சென்று பூஜையும் செய்தார்.

அங்குள்ளதட்சிணேஸ்வரம் பவதாரிணி காளி கோயிலில் அர்ச்சகர் வேலை கிடைத்தது. தங்குவதற்கு அறையும் ஒதுக்கப்பட்டது. ராமகிருஷ்ணர் தன் வாழ்வில் பெரும் பகுதியைக் கழித்தது இங்குதான். இதனிடையே காளியை நேரில் காணவேண்டும் என்ற ஏக்கம், ஆவல் தீவிரமானது. கடும் தியானம் மேற்கொண்டும், அது கைகூடாததால் காளி கையில் இருந்த வாளை உருவி உயிரை மாய்த்துக் கொள்ளவும் முயன்றார். உடனே சுயநினைவை இழந்ததாகவும் ஒரு பேரானந்த ஒளி தன்னை ஆட்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்குப் பிறகு அவரது நடவடிக்கைகள் அசாதாரணமாக இருந்தன. பித்து பிடித்து விட்டதாக பயந்துபோன அம்மா, திருமண ஏற்பாடுகளைத் தொடங்கினார். பிற்காலத்தில் உலகமே அன்னையாகப் போற்றவிருந்த சாரதாதேவி எங்கு இருக்கிறார் என்று சொன்னதோடு அவரையே மணம் செய்துவைக்குமாறும் கேட்டுக்கொண்டார் ராமகிருஷ்ணர். அனைத்து பெண்களையும் காளியின் அம்சமாகவே போற்றியவர், தன் மனைவியையும் அலங்கரித்து பூஜை செய்து, அவரது காலில் விழுந்து வணங்குவார்.

அதன் பின்னர் பைரவி பிராம்மணி என்ற பெண்ணிடம் தாந்த்ரீகமும், தோதாபுரி என்பவரிடம் அத்வைத வேதாந்தமும் கற்றார். சமாதி நிலையில் 6 மாதங்கள் இருந்தார். ராமர், கிருஷ்ணர், சீதை, ராதையின் காட்சி கிடைத்ததாக கூறியுள்ளார்.

இதனிடையே இவரது புகழ் பரவியது. ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்களில் முக்கியமானவர்தான் சுவாமி விவேகானந்தர்.

தன்னை நாடி வருவோருக்கு எளிமையான ஆன்மிக, தத்துவ, யதார்த்த கதைகளைக் கூறி மகத்தான விஷயங்களைப் புரியவைப்பது ராமகிருஷ்ணரின் வழக்கம். இவரது உபதேசங்கள் உபநிஷத்துக்குச் சமம் என்பார் விவேகானந்தர். ராமகிருஷ்ணரை காளியாகவும், சிவனாக வும் பார்த்ததாக சீடர்கள் கூறியுள்ளனர். ‘ராமனாக, கிருஷ்ணனாக வந்தவன்தான் இப்போது ராமகிருஷ்ணனாக வந்துள்ளேன்’ என்று தன்னிடம் அவர் கூறியதாக விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார்.

19-ம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த ஒப்பற்ற ஆன்மிக குருவும் வங்கம் தந்த ஆன்மிகப் பேரொளியுமான ராமகிருஷ்ணர் 50 வயதில் மறைந்தார்.

அப்பேர் பட்ட ராமகிருஷ்ணரின் அமுத மொழிகளில் சில இதோ:

” மானுட உடல், ஒரு தலையணை போன்றது. அதனுல் பஞ்சு போல எதை வேண்டுமானாலும் போட்டு நிரப்பலாம்.
ஆனால் பக்தன் ஒருவனுடைய உள்ளமோ ஈசனுடைய ஆலயம் போன்றது. ”

“சேற்று மீன் சேற்றினுள் புதையுண்டு கிடக்கிறது. ஆயினும் அம்மீன் மீது சேறு படிவது கிடையாது. அதே பாங்கில் மனிதன் உலகில் வாழவேண்டும். ஆனால் உலகப் பற்றினுள் அவன் தோய்ந்துபோய்விடக்கூடாது.

குழந்தையொன்று, படுக்கப்போனபோது தனக்குப் பசி வரும்போது தன்னை எழுப்பிவிட வேண்டும் என்ரு தன் தாயிடம் சொன்னது.
‘ பசி வரும்போது, நீயே எழுந்துகொள்வாய்.’ என்றாள் தாய். அருள் நாட்டம் அத்தகையது.

பொய் பேசிப் பழகுபவன், படிப்படியகப் பாபம் செய்வதற்கு அஞ்சாத கீழான மனப்பான்மை பெற்றுவிடுகிறான். சத்தியம் பேசுதல், சிறந்ததொரு தபசு ஆகிறது.

பிறர் எதைச் செய்ய வேண்டுமென்று நீ விரும்புகிறாயோ, அதை நீயே செய்.

மனிதர்கள் புகழ்வதும் விரைவு, இகழ்வதும் விரைவு. எனவே மற்றவர்கள் உன்னைப் பற்றிச் சொல்லும் வார்த்தைகளைக் கவனியாதே.

தர்ம வழியில் நிம்மதியாய் நீ வாழுங் காலத்தில் லோக ஜனங்களுடைய புகழையும், இகழையும் பொருட்படுத்தாதே.

முள்ளங்கி தின்றவனுக்கு முள்ளங்கி ஏப்பமும், கத்தரிக்காய் தின்றவனுக்கு அந்த ஏப்பமும்தான் வரும். அதுபோல், சில சமயங்களில் உள்ளத்தில் உள்ளதை வாய் வெளிவிட்டுவிடும்.