ராஜ்யசபா தேர்தல் முடிவுகள்!

ராஜ்யசபா தேர்தல் முடிவுகள்!

நம் இந்திய ஜனங்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் பொறுப்பு கொண்ட  இரண்டு மத்திய அவைகளில் ஒன்றான ராஜய சபா இடங்களுக்காக  உத்தரப் பிரதேசம், கர்நாடகா, சட்டீஸ்கர், தெலுங்கானா உள்ளிட்ட 6 மாநிலங்களில் உள்ள 25 இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.    இன்று காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிவரை நடைபெற்றது. பின்னர் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ராஜ்யசபாவில் ஆளும் பாஜகவுக்கு 58 எம்.பிக்கள்தான். ஆனால் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை யாக உள்ளன. ராஜ்யசபாவில் தனிப் பெரும்பான்மைக்கு 126 எம்.பிக்கள் தேவை. இந்த நிலையில் 16 மாநிலங்களில் 58 ராஜ்யசபா எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. அதிகபட்சமாக உ.பியில் 10, மகாராஷ்டிராவில் 6, பீகாரில் 6, மத்தியபிரதேசத்தில் 5 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 33 எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வாகினர்.

எஞ்சிய 25 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. உத்தப்பிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், தெலுங்கானா மாநிலங்களில்தான் இந்த 25 எம்.பி. பதவி இடங்களுக்கான போட்டி நிலவியது.

58 இடங்களுக்கான தேர்தல்களில் பாஜக 19; காங்கிரஸ் 10; திரிணாமுல் காங்கிரஸ் 4; பிஜூ ஜனதா தளம் 3; தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 3 இடங்களிலும் வென்றுள்ளன.

தேர்தல் முடிவுகள்:

எந்தெந்த மாநிலங்களில் ராஜ்யசபா தேர்தல்?

மாநிலம் மொத்த சீட்டுகள் போட்டியின்றி தேர்வு (மார்ச் 15ல்) இன்று தேர்தல் நடைபெறும் இடங்கள்
1 ஆந்திரா 3 6
2 பீகார் 6 3
3 சட்டீஸ்கர் 1 1
4 குஜராத் 4 4
5 ஹரியானா 1 1
6 ஹிமாச்சல் 1 1
7 கர்நாடகா 4 4
8 மத்திய பிரதேசம் 5 5
9 மகாராஷ்டிரா 6 6
10 தெலுங்கானா 3 3
11 உத்தரபிரதேசம் 10 10
12 உத்தரகாண்ட் 1 1
13 மேற்கு வங்கம் 5 5
14 ஒடிசா 3 3 0
15 ராஜஸ்தான் 3 3 0
16 ஜார்கண்ட் 2 2
மொத்தம் 58 33 25

ராஜ்யசபா தேர்தல்.. போட்டியின்றி தேர்வு விவரம்

கட்சி போட்டியின்றி தேர்வு
பாஜக 16
காங்கிரஸ் 5
பிஜுஜனதாதளம் 3
தெலுங்கு தேசம் 2
ஒய்எஸ்ஆர்காங்கிரஸ் 1
ஐக்கிய ஜனதாதளம் 2
ராஷ்டிரிய ஜனதாதளம் 2
சிவசேனா 1
தேசியவாத காங்கிரஸ் 1

Related Posts

error: Content is protected !!