பேரறிவாளனுக்கு ஒரு மாத பரோல்!

பேரறிவாளனுக்கு ஒரு மாத பரோல்!

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஒருமாத காலம் பரோல் வழங்கி அரசாணை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கால் நூற்றாண்டுகளுக்கும் மேல் சிறையிலேயே தங்கள் வாழ்வைக் கழித்துவரும் அவர்கள் நான்கு பேரையும் விடுவிக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாக, கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார்.

அந்த தீர்மானம் சட்டசபையிலும் நிறைவேற்றபட்டு மத்திய அரசுக்கு அனுப்பட்டது. ஆனால், மத்திய அரசு தங்கள் ஆலோசனையில்லாமல் யாரையும் விடுதலை செய்ய முடியாது என்று தெரிவித்து, நீதிமன்றத்திற்கு சென்று அவர்களின் விடுதலைக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது.  நால்வரின் விடுதலை குறித்த சீராய்வு மனு தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

பேரரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று அவருடைய தாயார் அற்புதம்மாள் பல ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார்.இதனிடையே, ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஒருமாத காலம் பரோல் வழங்கி அரசைணை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  தமிழக அரசு. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையைக் காண பரோல் கோரியிருந்தார் பேரறிவாளன் என்பதும் இதுகுறித்து கருத்து தெரிவித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. பேரறிவாளனின் தாயாரின் கோரிக்கை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் ஆணை சிறையை அடைந்த சில மணி நேரங்களில் பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவார்” என்று தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

 

error: Content is protected !!