November 29, 2021

ராஜஸ்தான் : புதிய அமைச்சரவை பதவியேற்பு!

ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான புதிய காங்கிரஸ் அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா இல்லத்தில் பதவி ஏற்றது. கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர், 11 கேபினெட் அமைச்சர்கள் 4 இணை அமைச்சர்கள் ஆக மொத்தம் 16 அமைச்சர்கள் ஞாயிற்றுக்கிழமை பதவி ஏற்றனர்.

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ராஜஸ்தான் அமைச்சரவை இன்று எந்த பிரச்சனையும் இல்லாமல் முடிவுக்கு வந்தது. ராஜஸ்தானில் அனைத்து பிரிவினரின் கோரிக்கைகளையும் ஏற்று சமச்சீர் நிலையில் ஒரு புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவை சிறப்பாக இயங்கும் 2013ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று சச்சின் பைலட் அறிவித்தார்.

இனிமேல் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியில் பிரிவினை போக்குகளுக்கு இடம் இல்லை என்றும் அவர் உறுதியாக குறிப்பிட்டார்.

புதிய அமைச்சரவையில் நான்கு தலித்துகளுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது பெண்களுக்கும் பழங்குடியினருக்கும் முஸ்லிம்களுக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

சுயேட்சைகள் யாரும் அமைச்சராக நியமிக்கப்பட வில்லை.

ராஜஸ்தான் மாநில அமைச்சரவையின் வளம் இப்பொழுது 30 ஆக உயர்ந்துள்ளது. முன்பு அமைச்சரவையின் எண்ணிக்கை 21 ஆக இருந்தது.

புதிய அமைச்சர்கள் தேர்வு ஒருவருக்கு ஒரு பதவி என்ற ஒழுங்கு முறை பின்பற்றப்பட்டுள்ளது.

அமைச்சராக இருந்து விடுபட்ட சிலருக்கு கார்ப்பரேஷன்.போர்டுகள் ஆகியவற்றின் நிர்வாகப் பதவிகள் அளிக்கப்படும் என்று காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்பட்டது.