மனம் திறந்த மன்னிப்பைக் கோருகிறேன் – ஆ.ராசா

மனம் திறந்த மன்னிப்பைக் கோருகிறேன் – ஆ.ராசா

மிழகத் தேர்தல் பரப்புரையின் போக்கை மாற்றிய அ.ராசா இன்று நீலகிரியில் “முதலமைச்சர் எனது பேச்சால் காயப்பட்டு, கலங்கினார் என்ற செய்தியை செய்தித்தாள்கள் வாயிலாகப் படித்து மிகுந்த மனவேதனை அடைகிறேன். இடப்பொருத்தமற்று சித்தரிக்கப்பட்டு, தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட எனது பேச்சிற்காக எனது அடிமனதின் ஆழத்திலிருந்து வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். முதல்வர் பழனிசாமி அரசியலுக்காக அல்லாமல், உள்ளபடியே காயப்பட்டிருப்பதாக உணருவாரேயானால் மனம் திறந்த மன்னிப்பைக் கோருவதில் எனக்கு சிறிதும் தயக்கமில்லை” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகின்ற நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சியினர் ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ஆ.ராசா சமீபத்தில் திமுக தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி தாயார் குறித்தும் பிரதமர் குறித்தும் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு மேலெழுந்தது. இந்த குற்றச்சாட்டையடுத்து ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், பல அரசியல் கட்சியினரும், பெண்கள் அமைப்பினரும் தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து நேற்று (28/02/2021) திருவொற்றியூரில் அதிமுக வேட்பாளர் குப்பனுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி, தனது தாய் குறித்து அவதூறாக பேசியதாக கூறி கண்ணீர் மல்க உரையாற்றினார். இதனையடுத்து ராசாவுக்கு பல்வேறு தரப்பிலிருந்து நெருக்கடிகள் மேலெழுந்தன.

இந்நிலையில் இன்று காலை நீலகிரியில் செய்தியாளர்களை சந்தித்த ராசா, “ஸ்டாலின் அரசியல் ஆளுமையையும், முதல்வர் பழனிசாமியின் அரசியல் ஆளுமையையும் பற்றித்தான் பேசி விளக்கம் கொடுத்தேன். எனது பேச்சுக்கு மனம் வருந்துகிறேன்.முதல்வர் காயப்பட்டால் மன்னிப்பு கோருகிறேன்.” என்று தனது மன்னிப்பை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அறிக்கையும், வீடியோ காட்சியும் இதோ:

error: Content is protected !!