ரயில்களில் இரவில் செல்போன் & லாப்டாப் சார்ஜ் வசதி துண்டிப்பு!

ரயில்களில் இரவில் செல்போன் & லாப்டாப் சார்ஜ் வசதி துண்டிப்பு!

ம் இந்தியன் ரயில்வே துறையின் சார்பில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் மொபைல் போனுக்கு சார்ஜ் செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் ரயில்களில் அவசர நிமித்தம் பயணிப்போருக்கு பெரும் உதவியாக இருந்து வந்தது. ஆனால் சில நேரங்களில் இரவில் சார்ஜ் போடும் பயணிகள் மறுநாள் காலை அணைக்காமல் சென்று விடுவதாக புகார் எழுந்தது. இதனால் மின் சப்ளை மாறுவதுடன், சிறுசிறு மின் விபத்தும் ஏற்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக கடந்த 2014-ம் ஆண்டு, பெங்களூரு-ஹாசுர் சாகிப் நான்தத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டது.

இதனை தடுக்க எக்ஸ்பிரஸ் ரயில்களில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை, பிளக் பாயின்ட்களுக்கு செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மற்ற நேரங்களில் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும், பாதுகாப்பு குழு தரப்பில் இருந்து இது குறித்த சுற்றறிக்கை அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரயில்களுக்குள் புகைபிடிப்பவர்கள் ரயில்வே சட்டத்தின் பிரிவு 167 ன் கீழ் தண்டிக்கப்படுகிறார்கள். புகைபிடிப்பதைக் கண்டறிந்த பயணிகளுக்கு ரூ .100 வரை அபராதம் விதிக்கப்படும். ரயில்களில் எரியக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்வதும் ரயில்வே சட்டத்தின் பிரிவு 164 ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.மேலும் குற்றவாளிக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ .1000 அபராதம் விதிக்கப்படலாம் என்பதும் தெரிந்த தகவல்களே,

இந்நிலையில் பாதுகாப்பு கமிஷனரின் பரிந்துரையை தீவிரமாக அமல்படுத்த ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. கடந்த 16-ந் தேதி முதல் இதை நடைமுறைக்கு கொண்டுவந்துவிட்ட மேற்கு ரெயில்வே நிர்வாகம், குறிப்பிட்ட நேரத்தில் சார்ஜிங் பாயிண்டுகளுக்கான மின் துணைப்பை துண்டித்து விடுகிறது. ரெயில்வே வாரியத்தின் அறிவுறுத்தலின்படி தாங்கள் இதை அமல்படுத்தி வருவதாக மேற்கு ரயில்வே தலைமை மக்கள்தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார் நாளை – ஏப் 1 முதல் தெற்கு ரயில்வே இதை செயல்படுத்த முடிவு செய்திருக்கிறதாம்.ஆனால் ரயில்வேயின் இந்த நடவடிக்கையால் பயணிகள் அதிருப்தியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!