குடியுரிமை திருத்த சட்டம் : எதிர்ப்பு போராட்டங்களினால், ரயில்வேயின் 88 கோடி மதிப்புள்ள சொத்துகள் சேதம்!

குடியுரிமை திருத்த சட்டம் : எதிர்ப்பு போராட்டங்களினால், ரயில்வேயின் 88 கோடி மதிப்புள்ள சொத்துகள் சேதம்!

மோடி அரசு அதிரடியாக கொண்டு வந்தகுடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாடுமுழுவதும் பல்வேறு மாநிலங்களில் பல்வேறுவிதமான போராட்டங்கள் நடைபெறுகின்றன. மக்களின் போராட்டத்தால் ரயில்வே துறைக்கு 88 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அசாம், திரிபுரா, மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் தொடங்கிய போராட்டம், தற்போது டெல்லி, உ.பி, பீகார், மேற்கு வங்கம், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் வன்முறையாக மாறியுள்ளது. இதில் நாடு முழுவதும் 19 பேர் பலியாகி உள்ளனர். டெல்லியில் சீலாம்பூர், ஜாப்ராபாத், நாடாளுமன்றம், மத்திய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. தென்னிந்தியாவிலும் தமிழகம், கேரள மாநிலங்களில் ரயில் மறியல் உள்பட போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

பல இடங்களில் மறியலின்போது ரயில்களும் ரயில்வே சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டன. இந்த போராட்டங்களினால் நாடு முழுவதும் ரயில்வே துறைக்கு சொந்தமான 88 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக இந்தியன் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கிழக்கு ரயில்வே பிராந்தியத்தில் மட்டும் ரூ. 72 கோடி மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்துள்ளன .

தென்கிழக்கு ரயில்வே பிராந்தியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ. 13 கோடி மதிப்பிலும்,

வடகிழக்கு ரயில்வே மண்டலத்தில் ரூ. 3 கோடி மதிப்பிலும் ரயில்வே சொத்துகள் சேதமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!