ஆகஸ்ட் மாதம் 12 -ம் தேதி வரை அனைத்து ரயில் சேவைகளும் ரத்து!
நாடு முழுவதும் கோரோனாவுக்குப் பயந்து போடப்பட்ட ஊரடங்கால் பயணிகள் ரயில் போக்கு வரத்து முற்றிலுமாக முடங்கியது. மத்திய அரசு சில தளர்வுகளை வழங்கி வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப அரசு சிறப்பு ரயில்கள் இயக்கியது. முக்கிய நகரங்கள் இணைக்கும் தடங்களில் ரயில்கள் இயங்கின. இதனால் பல லட்சக்கணக்கான தொழிலார்கள் வீடு திரும்பினர்.
இதனிடையே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துள்ளதால் வரும் ஆகஸ்ட் மாதம் 12 -ம் தேதி வரை அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே தெரிவித்துள்ளது. பயணிகள் ரயில், எக்ஸ்பிரஸ் ரயில், நகர்ப்புற மின்சார ரயில்கள் என அனைத்து சேவைகளும் இந்த கால கட்டத்தில் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.
மேலும் ஏற்கனவே ஆக. 12-ம் தேதி வரையிலான பயணத்திற்க்கு முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் கட்டணம் அனைத்தையும் திருப்பி வழங்கப்படும் எனவும் இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.
முக்கிய நகரங்களை இணைக்கும் சிறப்பு ரயில்கள், சரக்கு ரயில்கள் செயல்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது