ராகுல் வந்தார்.. அப்போலோ சென்றார்.. -அப்பாலே .. டாட்டா சொல்லிட்டு போயிட்டார்!

ராகுல் வந்தார்.. அப்போலோ சென்றார்.. -அப்பாலே .. டாட்டா சொல்லிட்டு போயிட்டார்!

முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 15 நாட்கள் கடந்துவிட்டன. கடந்த செப்டம்பர் 22-ம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக முதல்வர் ஜெயலலிதா சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சென்னைக்கு திடீர் பயணமாக அப்போலோ மருத்துவனை இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் வந்த ராகுல் காந்தி, முதல்வருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்த தகவல்களை கேட்டறிந்தார்.

raghul oct 7

சென்னை விமான நிலையத்தில் இருந்து அப்போலோ மருத்துவமனை வரை அவர் வந்து சேர போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. விமான நிலையத்திலிருந்து 15 நிமிடங்களில் ராகுல் அப்போலோ மருத்துவமனை வந்து உள்ளே சொன்றார்.

பின்னர்  மருத்துவமனையில் இருந்து சில நிமிடங்களில் வெளியே வந்த ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது மருத்துவமனை வளாகமே பரபரப்பாக காட்சியளித்தது.

செய்தியாளர்கள் அனைவரும் ராகுலிடம் அடுத்தடுத்து கேள்விகள் கேட்டதால், ராகுல் என்ன சொன்னார் என்பது கூட செய்தியாளர்களால் கேட்க முடியாமல் போனது.

செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் கூறியதாவது, முதல்வரை சந்திக்க தில்லியில் இருந்து வந்தேன். முதல்வர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

சிகிச்சை பெறும் ஜெயலலிதாவுக்கு, சோனியா காந்தியின் ஆதரவையும் நல்வாழ்த்துகளையும் தெரிவிக்கவே வந்தேன். முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணம் அடைவார் என்று கூறினார்.

டெயில் பீஸ்:

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி அதிரடி அரசியல்வாதி ஆவார். வழக்கமான அரசியல் தவிர்த்து சாதாரணமாக செயல்பட கூடியவர். உத்தர பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த ராகுல் அடிக்கடி முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து கேட்டு வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று உத்தரபிரதேசத்தில் பிரச்சாரத்தை முடித்த ராகுல் திடீரென தனது வழக்கமான அப்பாயிண்ட் மெண்டுகளை ஒதுக்கி வைத்துவிட்டு திடீரென சென்னை கிளம்பி விட்டார்.

இத்தனைக்கும்ராகுல் காந்தி பிரதமருக்கு இணையான பாதுகாப்பில் உள்ள அரசியல் தலைவர். அவர் நடவடிக்கைகள் அனைத்தும் மத்திய உளவுப்பிரிவு மற்றும் மாநில உளவுப்பிரிவு கண்காணிப்பு இருக்கும். அவருடைய பயணத்தை தனி லிஸ்டாக போடுவார்கள்.

ஆனால் இன்று காலை ராகுல் காந்தி யாரிடமும் சொல்லாமல் திடீரென கிளம்பி இருக்கிறார். தனி விமானத்தில் ராகுல் காந்தி கிளம்பியதும் தான் சென்னைக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் அப்போலோ மருத்துவமனைக்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்த்து சென்றார்.

ராகுல் காந்தி வருகை பற்றி தமிழ்நாட்டிலுள்ள காங்கிரஸ் தலைவர்கள் யாருக்கும் தெரியப்படுத்தப்படவில்லை. தொலைக்காட்சி செய்திகளை பார்த்த பின்னரே திருநாவுக்கரசர் அப்போலோவுக்கு சென்றுள்ளாராம்

error: Content is protected !!