April 13, 2021

ரபேல் நடால் ;20-வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார்!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 12 முறை சாம்பியனும், உலக தரவரிசையில் முதலிடம் வகிக்கும் செர்பியாவின் ஜோகோவிச்சை நடால் எதிர்த்து விளையாடினார். முதல் செட்டை 6 – 0 எனவும் 6 – 2 என நடால் 2-வது செட்டை கைப்பற்றினார். 3-வது செட்டில் ஜோகோவிச் சற்று நெருக்கடி கொடுத்தாலும் நடால் இறுதியில் 7-5 என 3-வது செட்டை தனதாக்கினார். இதன் மூலம் நடால் 6-0, 6-2, 7-5 என நேர்செட் கண்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

ரபேல் நடால் வெல்லும் 20-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். இதன் மூலம் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற ரோஜர் பெரடரின் சாதனையை நடால் சமன் செய்துள்ளார்.